விளையாட்டு இல்லை, ஆதாருடன் மொபைல் எண் இணைப்பதில் இத்தனை நன்மைகள்..!

மொபைல் நம்பரை இதுவரை ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை என்றால், உடனே இணைத்துவிடுங்கள். இல்லையெனில், ஆதார் ஆன்லைன் சேவைகள் உள்ளிட்ட முக்கிய சேவைகளை நீங்கள் பெற இயலாமல்...

உங்கள் மொபைல் நம்பரை இதுவரை ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை என்றால், உடனே இணைத்துவிடுங்கள். இல்லையெனில், ஆதார் ஆன்லைன் சேவைகள் உள்ளிட்ட முக்கிய சேவைகளை நீங்கள் பெற இயலாமல் போய்விடும்.

UIDAI அமைப்பு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள டுவிட்டில், ஆதாருடன் மொபைல் நம்பரை இணைத்துள்ளவர்கள், ஆதார் ஆன்லைன் சேவைகள், வருமானவரி தாக்கல் செய்ய உதவும் இ-வெரிபிகேசன் உள்ளிட்டவைகள் தற்போது ஆதார் எண் மூலமாகவே நடைபெறுகிறது. ஆன்லைன் ஓபிடி அப்பாயிண்ட்மெண்ட்ஸ், எம்-ஆதார், ஆதார் தொடர்பான எஸ்எம்எஸ் அலர்ட்கள் உள்ளிட்ட சேவைகளை எளிதாகவும் அதேசமயம் துரிதமாகவும் பெறமுடியும் என்று டுவிட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை அப்டேட் பண்ண பயோமெட்ரிக் பதிவுமுறை அவசியமாகும். ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர் தொலைந்துவிட்டதால், அருகிலுள்ள ஆதார் சேவை மையத்திற்கு சென்று, தங்களது பயோமெட்ரிக் பதிவுகளை உள்ளீடு செய்து புதிய மொபைல் நம்பரை, ஆதார் எண்ணுடன் இணைக்கலாம். இதற்கு எந்தவித ஆவணமும் தேவையில்லை. மொபைல் நம்பரை ஆன்லைன் அல்லது தபால் முறையில் ஆதார் எண்ணுடன் அப்டேட் செய்யமுடியாது, ஆதார் சேவை மையத்தின் மூலமே இதை செய்யமுடியும்.

ஆதார் ஆன்லைன் சேவைகள் : ஆதார் கார்டில் முகவரி மாற்றம் செய்ய வேண்டுமென்றால், உரிய ஆவணங்களை கொண்டு அதை எளிதாக ஆன்லைனிலேயே செய்துவிடலாம்.

அதை செய்யும் வழிமுறை

UIDAI அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
அதில் My Aadhaar பிரிவில் Update your address online தேர்வு செய்துகொள்ளவும்
12 இலக்க ஆதார் எண் அல்லது 16 இலக்க விர்ச்சுவல் ஐடியின் உதவியுடன் லாகின் செய்யவும்
பின் கப்சா சரிபார்ப்பிற்கு பிறகு, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பருக்கு ஒன்டைம் பாஸ்வேர்ட் வரும். இதன் உதவியுடன் முகவரி மாற்றம் செய்திடலாம்.

ஆதார் அடிப்படையிலான சேவைகள் : ஆதார் ஒன்டைம் பாஸ்வேர்டின் மூலம் வருமானவரி தாக்கலுக்கான இ-வெரிபிகேசனை மேற்கொள்ளலாம்.

அதன் வழிமுறைகள்

இ-பைலிங் போர்டலுக்கு செல்லவும்
பான் நம்பருடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளவும்
இணைப்பு உறுதியானவுடன், அந்த பக்கத்தில் உள்ள e-verify பகுதிக்கு சென்று, e-verify return using Aadhaar OTP தேர்வு செய்யவும்.
ஒன் டைம் பாஸ்வேர்ட், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு வரும்
அந்த ஒன்டைம் பாஸ்வேர்டை, இ பைலிங் போர்டலில் உள்ளீடு செய்யவும்.

எம்-ஆதார் : ரயில் பயணங்களில் அடையாள ஆவணமாக எம்-ஆதாரை பயன்படுத்திக்கொள்ள ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. எம்- ஆதார், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரில் டவுன்லோடு ஆகும் வகையில் UIDAI அமைப்பு வடிவைமத்துள்ளது. மொபைல், போனில் பாஸ்வேர்டை உள்ளீடு செய்வதன் மூலம், அதில் ஆதார் கார்டை பார்க்கலாம்.

ஆதார் சேவைகளுக்கான எஸ்எம்எஸ் அலர்ட்கள் : UIDAI, ஆதார் சேவைகளை எஸ்எம்எஸ்களின் மூலம் பெறவும் வழிவகை செய்துள்ளது. இந்த எஸ்எம்எஸ்களை பெற இன்டர்நெட் இணைப்பு அவசியமில்லை. விர்சுவல் ஐடியை உருவாக்குதல், இழந்த விர்சுவல் ஐடியை திரும்ப பெறுதல், ஆதார் பயோமெட்ரிக்கை லாக்/ அன்லாக் செய்தல் ஆதார் எண்ணை லாக்/ அன்லாக் செய்தல் உள்ளிட்ட சேவைகளை, எஸ்எம்எஸ் அலர்ட் மூலம் பெறலாம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close