உங்கள் அனுமதியின்றி உங்களை உளவு பார்க்கின்றதா ஆதார் அமைப்பு ?

ஆதாரின் நம்பிக்கை குறித்து தொடர்ந்து ஏற்படும் சர்ச்சைகள் !

ஆதாரின் நம்பிக்கை குறித்து தொடர்ந்து ஏற்படும் சர்ச்சைகள் !

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Aadhar card update

Aadhar card update

ட்ராய் சேர்மன் ஆர்.எஸ். ஷர்மாவின் ஆதார் எண்ணை வைத்து ஹேக் செய்ய முற்பட்ட ஏலியட் ஆல்டெர்சன் என்ற பிரெஞ்ச் ஹேக்கர் தற்போது ட்விட்டரில் Aadhaar helpline number குறித்து புதிய கேள்வியைக் கேட்டுள்ளார்.

அது மீண்டும் ஆதார் பாதுகாப்பு குறித்து புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Advertisment

கடந்த வாரம் ட்ராய் சேர்மன் ஆர்.எஸ். சர்மா தன்னுடைய ஆதார் எண்ணை ட்விட்டரில் பதிய ஹேக்கர்கள் அவருடைய பிறந்த தேதி, முகவரி, மற்றும் இதர விபரங்களை ட்விட்டரில் வெளியிட்டனர்.

Aadhaar helpline number சர்ச்சை

ஆதார் உதவி மையத்தின் டோல் ப்ரீ (aadhaar helpline number) எண்ணான  1800-300-1947 இந்த எண்கள் நிறைய ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களின் போனில் ஏற்கனவே பதிவாகியுள்ளது.

ஆதார் அட்டை வைத்திருந்தாலும் இல்லாவிடினும் அவ்வாடிக்கையாளர்களின் போனில் இந்த எண் டீஃபால்ட்டாக பதிவாகியுள்ளது.

Aadhaar helpline number குறித்து பதியப்பட்ட ட்விட்டர் பதிவுகள்

Aadhaar helpline number பற்றி ஃப்ரெஞ்ச் ஹேக்கர் எழுப்பிய கேள்வி...

Advertisment
Advertisements

இந்த கேள்விக்கு பின்பு இந்த எண்ணை தன்னுடைய அலைபேசியில் சரி பார்த்து தகவல்களை உறுதி செய்திருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

வெறும் காண்டாக்ட் எண்ணால் என்ன நடந்துவிடப் போகிறது என்று கேட்பவர்களும் அங்கு இருக்கிறார்கள்.

என்னுடைய விருப்பம் இன்றி என்னுடைய திறன்பேசியில் எப்படி இந்த எண்ணை டிஃபால்ட்டாக இணைக்கலாம் என்ற கேள்வியினையும் தொடர்ந்து கேட்டு தங்களுடைய கருத்துகளை பதிவு செய்துவருகிறார்கள்.

வாடிக்கையாளர் சேவை எண் போன்றுதான் இதுவும் என்று எடுத்துக் கொண்டாலும் அனைத்துவிதமான போன்களிலும் இந்த எண் பதிவு  செய்யப்பட்டதாகவே வருகிறது. இதனால் தனிமனிதனின் சுதந்திரம் பாதிக்கப்படுவதாக பலர் கருத்து தெரித்துள்ளனர்.

இது குறித்து அரசு பேசுகையில், நாங்கள் எந்த ஒரு திறன்பேசி தயாரிக்கும் நிறுவனத்திடமும், சர்வீஸ் ப்ரொவைடர்களிடமும் இந்த எண்ணை டீஃபால்ட்டாக இணைக்க வேண்டும் என்று கூறவில்லை என்று அறிவித்திருக்கிறது.

யு.ஐ.டி.ஏ.ஐ எப்படியாக இப்படி ஒன்றை செய்யலாம் என்று தொடர்ந்து கேள்வி கேட்டு வருகிறார்கள் பொதுமக்கள். சில நாட்களுக்கு முன்பு தான் எந்த ஒரு சமூக வலைதளத்திலும் ஆதார் சேலஞ்ச் என எதையாவது ஏற்றுக் கொண்டு ஆதார் எண்களை பதிய வேண்டாம் என யு.ஐ.டி.ஏ.ஐ கேட்டுக் கொண்டது.

Aadhaar Card Uidai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: