Aadhar Registration: அரசு சார்ந்த விஷயமானாலும், தனியார் சம்பந்தப்பட்ட விஷயமானாலும் ஆதார் எண் இன்று அவசியமான ஒன்றாகி விட்டது.
இதனை பெரும்பாலானோர் பதிவு செய்து விட்டாலும் இன்னும் சிலர் இதனைப் பெறாமலேயே இருக்கிறார்கள்.
இதற்கிடையே திருச்சி மாவட்டத்தில் 33 அஞ்சல் நிலையங்களில் கட்டணமின்றி ஆதார் அடையாள அட்டை பதிவு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் ஆதார் அட்டையில் திருத்தம் செலுத்த ரூபாய் 50 கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்நிலையில் இந்தச் சேவை தற்போது தமிழகம் முழுவதும் விரிவடைந்துள்ளது. அதன்படி இதுவரை ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் தங்களுக்கு அருகிலிருக்கும் அஞ்சலகத்திற்கு சென்று இலவசமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்!