ஆதாரை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டம்!

பணம் யாரால் வைப்பு செய்வது என்று கண்டறியப்படும் என கூறப்படுகிறது.

aadhar card
aadhar card

அதிக பணத்தை வங்கியில் வைப்பு செய்வதற்கு கட்டாயமாக்க மத்திய அரசு பரிசீலனை செய்து
வருவதாக கூறப்படுகின்றது.

ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் வங்கியில் வைப்பு செய்தால், பான் எண் கட்டாயம் வேண்டும் என்ற
நடைமுறை உள்ளது. இந்த சூழ்நிலையில், போலியாக பான் எண்ணை பயன்படுத்துவதைத் தவிக்க, பான் எண்ணுடன் ஆதார் எண்ணையும் தெரிவித்தால், பணம் யாரால் வைப்பு செய்வது என்று கண்டறியப்படும் என கூறப்படுகிறது.

ஆதார் எண்ணை தெரிவிப்பது மட்டுமல்லாமல், அதோடு சேர்த்து, கை ரேகை பதிவுகளும்
இடம்பெறும். வங்கியில் வைப்புச் செய்யப்படும் தொகை வரம்பு குறித்து முடிவெடுக்க முடியாத சூழ்நிலையில்,

ஆண்டுக்கு ₹ 20 லட்சம் அல்லது ₹ 25 லட்சம் பணம் வைப்பு செய்பவர்களுக்கு இந்த நடைமுறை
அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆதார் எண்ணை தெரிவிக்க வேண்டும் என்ற இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Aadhar card aadhar card number central government aadhar card

Next Story
முத்தலாக் தடை சட்ட மசோதாவில் இடம் பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள் என்னென்ன?Triple Talaq Bill 2019 key points
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com