Aadhar Card Download Tamil News: இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை (12 இலக்க தனிப்பட்ட அடையாள எண்) கட்டாயம் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. தற்போதைய நிலையில், அனைவரிடமும் ஆதார் அட்டை உள்ளது. முதன்முதலில் வழங்கப்பட்ட இந்த ஆதார் அட்டை காகிதத்தால் ஆன அட்டை வழங்கப்பட்டது. தற்போது இந்த அட்டை பலரிடம் கிழிந்து போயும், விபரங்கள் ஏதும் தெரியமாலும் உள்ளது.
இதனால் ஆதார் அட்டையை பிளாஸ்டிக் அட்டையாக பெறுவதற்கு எளிமையான வழியை இந்திய தனித்துவமான அடையாள ஆணையம் (UIDAI) அறிவத்துள்ளது. அதன்படி சில எளிய படிகளின் மூலம் நீங்கள் ஆதார் பி.வி.சியை ஆர்டர் செய்யலாம். பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் ஆதார் பி.வி.சி கார்டை ஆர்டர் செய்ய நீங்கள் பின்பற்றக்கூடிய வழிமுறைகளை இங்கே காணலாம்.
இந்த படிகளை பின்பற்றி இணையதளத்தில் பதிவு செய்தால், ஸ்மார்ட் சைஸ் பாலிவினைல் குளோரைடு (பிவிசி) செயற்கை பிளாஸ்டிக் பாலிமர் அட்டையில் ஆதார் கிடைக்கிறது. பதிவுசெய்த பயனர்கள் பி.வி.சி ஆதார் அட்டையை ஆன்லைனில் ரூ .50 / - கட்டணம் செலுத்தி ஆர்டர் செய்யலாம் (ஜி.எஸ்.டி மற்றும் ஸ்பீட் போஸ்ட் கட்டணங்கள் உட்பட).
அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, பாதுகாப்பு அம்சங்களுடன் வரும் "ஆதார் அட்டையில், டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட பாதுகாப்பான கியூஆர் குறியீடு, ஹாலோகிராம், கோஸ்ட் படம், கில்லோச் முறை போன்றவை உள்ளன." மேலும் ஆதார் அட்டை பயனர்கள் தங்கள் ஆதார் எண் / மெய்நிகர் அடையாள எண் / ஈஐடியைப் பயன்படுத்தி ஆதார் பி.வி.சி.யை பெறலாம்.
இது குறித்து UIDAI தனது ட்விட்டர் பதிவில்,
உங்கள் ஆதாரில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணை வைத்து, ஒரு நபர் முழு குடும்பத்திற்கும் ஆன்லைனில் ஆதார் பி.வி.சி அட்டைகளை ஆர்டர் செய்யலாம். இப்போது ஆர்டர் செய்ய https://residentpvc.uidai.gov.in/order-pvcreprint என்ற இணைப்பைப் பின்தொடரவும் என்று பதிவிட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் ஆதார் பி.வி.சி கார்டை ஆர்டர் செய்ய பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் :
முதலில் ஆதார்கார்டின் UIDAI வலைத்தளமான https://uidai.gov.in/ என்ற வலைதளத்தில் உள்ளே செல்லவும்.
முகப்பு பக்கத்தில், எனது ஆதார் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
அடுத்து கெட் ஆதார் பிரிவின் கீழ், 'ஆர்டர் ஆதார் பி.வி.சி கார்டு' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்
அடுத்து, உங்கள் 12 இலக்கங்கள் ஆதார் எண் அல்லது 16 இலக்க மெய்நிகர் ஐடி / 28 இலக்க ஈஐடி எண்ணனை பதிவு செய்யவும்.
பாதுகாப்பு குறியீடு அல்லது கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு சென்ட் ஓடிபி (Send OTP) என்பதைக் கிளிக் செய்க
நீங்கள் பதிவுசெய்த மொபைல் எண்ணில் நீங்கள் பெற்ற ஓடிபியை (OTP) உள்ளிடவும்
விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் சரிபார்த்து சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்க
கடைசியாக, கட்டண விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து தேவையான தொகையை செலுத்துங்கள்.
உங்கள் கட்டணம் முடிந்ததும், கோரிக்கை நாள் தவிர்த்து, ஐந்து வேலை நாட்களுக்குள் புதிய ஆதார் அட்டையை ஸ்பீட் போஸ்ட் மூலம் வீட்டிற்கு வந்தடையும். இருப்பினும், நீங்கள் ஒரு ஆதார் பி.வி.சி கார்டை ஆர்டர் செய்தவுடன், யுஐடிஏஐயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அவர்களின் ஆதார் பிவிசி அட்டையின் நிலையை நீங்கள் சரிபார்க்கலாம்.
முக்கிய குறிப்புகள் :
பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு மட்டுமே ஆதார் மாதிரிக்காட்சி கிடைக்கிறது.பதிவு செய்யப்படாத மொபைல் அடிப்படையிலான ஆர்டருக்கு கிடைக்காது
மேலும் எம்-ஆதார் பயன்பாடு வழியாக நேர அடிப்படையிலான-ஒரு-நேர-கடவுச்சொல் (TOTP) ஐப் பயன்படுத்தலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.