ஆதார் இருக்கிறதா? சிம்பிளாக நீங்களே பான் கார்டு பெறலாம்!

Pan Card Tamil News: ஆதார் கார்டை பயன்படுத்தி சில நிமிடங்களில் பான் கார்டு பெறும் வழிமுறை

Aadhar Card- Pan Card Tamil News: கொரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவில் 2020-ம் ஆண்டு முழுவதும் கடந்துவிட்டது. இந்த காலகட்டத்தில் பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் முக்கிய ஆவணங்கள் திருத்தம் மாற்றம் மற்றும் இதர பணிகளுக்காகஅரசு ஏராளமாக வசதிகளை செய்துள்ளது. அந்த வகையில் நிதி மற்றும் கார்ப்பரேட் அமைச்சகங்காலால் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்களுடன் முக்கிய முயற்சிகள்  குறித்து நிதி அமைச்சகத்தின் ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பாக கொரோனா பாதிப்புக்கு இடையில், பான் கார்டு பெறுவதற்கான செயல்முறையை இன்னும் எளிமையாக மாற்றப்பட்டுள்ளது. ​​கடந்த 2020 மே மாதம்  அன்று, ஆதார் எண் அடிப்படையிலான இ-கேஒய்சியைப் பயன்படுத்தும் உடனடி நிரந்தர கணக்கு எண் (பான்) வசதியை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார்.

இந்த வசதி முதல் முறையாக ஒரு தனிப்பட்ட அடையாளத்தைப் பெற விரும்பும் நபர்களுக்காக மட்டுமே அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த செயல்முறையில், காகிதமற்றது மற்றும் மின்னணு பான் (இ-பான்) இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் இந்த வழிமுறைகளில், ஒரு சில கிளிக்குகளைப் பயன்படுத்தி ஒரு சில நிமிடங்களில் பான் கார்டைப் பெறமுடியும்.

இந்தியாவின் தனித்துவமான அடையாள ஆணையத்தால் (யுஐடிஏஐ) ஆதார் வழங்கப்படும் அதே வேளையில், பான் என்பது ஒரு நபர், நிறுவனம் அல்லது நிறுவனத்திற்காக ஐ-டி துறையால் ஒதுக்கப்பட்ட 10 இலக்க எண்ணெழுத்து எண்.

How To Get E Pan Card By Using Aadhar Card: மின்-பான் பெறுவது எப்படி?

ஆதார் அடிப்படையில் உடனடி மின்-பான் பெறுவது எப்படி என்பதை தெரிந்தகொள்வோம்:

  1. முதலில் நீங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான http://www.Incometaxindiaefiling.Gov.In இல் உள்நுழைய வேண்டும்.
  2. முகப்புப் பக்கத்தின் (Home) இடது புறத்தில், நீங்கள் ‘விரைவு இணைப்புகள்’ (Quick link) என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்
  3. அடுத்து கீழே, ‘இன்ஸ்டன்ட் இ-பான்’ என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்

4. அடுத்து அப்ளை (‘Apply) உடனடி மின்-பான்’ விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

  1. அடுத்து உடனடி மின்-பான் விண்ணப்பிக்க ஒரு படிவம் காண்பிக்கப்படும். அதில், உங்கள் ஆதார் ஆவணத்துடன் பொருந்தக்கூடிய அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து சமர்ப்பி (Submit)என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
  2. இதற்குப் பிறகு, ஒரு நபரின் செல்லுபடியாகும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செயலில் உள்ள மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் ஒரு முறை கடவுச்சொல் (OTP) அடிப்படையில் புதிய பான் ஒதுக்கப்படும்.
  3. புதிய பான் கார்டில் உங்கள் பெயர், பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண் மற்றும் முகவரி பற்றிய பதிவுகள் இருக்கும்.
  4. பான் ஒதுக்கப்பட்டதும், சில நாட்களுக்குள் தபால் மூலம் பான் கார்டைப் பெறுவீர்கள்.

இன்ஸ்டன்ட் பான் வசதியை அறிமுகப்படுத்துவது வருமான வரித் துறையின் டிஜிட்டல் இந்தியாவை நோக்கி மற்றொரு படியாகும். இதன் மூலம் வரி செலுத்துவோருக்கு இணங்குவதை மேலும் எளிதாக்குகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Aadhar card pan card tamil news get instant pan card just few minits to use aadhar details

Next Story
விவசாயிகள் போராட்டம்: எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் சோனியாsonia ghandhi organise mega protest to support delhi farmer protest -விவசாயிகள் போராட்டம்: எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் சோனியா
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com