உங்க ஆதாரில் இந்த தவறு இருக்கிறதா..? பத்தே நிமிடத்தில் தீர்வு ரெடி

Aadhar Update: உங்கள் வீட்டில் இருந்து கொண்டே மொபைல் போன் மூலமாக உங்கள் பெயர், பாலினம், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொழியை புதுப்பிக்கலாம்.

How to update Aadhaar using mobile phone with in ten minutes. -உங்க ஆதாரில் இந்த தவறு இருக்கிறதா..? பத்தே நிமிடத்தில் சரி செய்யலாம்

Aadhar Card Tamil News: இந்தியாவின் தனித்துவமான அடையாள ஆணையம் (UIDAI), இந்திய குடிமகன்கள் / குடிமகள்கள் ஒவ்வொருவருக்கும் ஆதார் அவசியம் என்று அறிவுறுத்தியுள்ளது. அதன் படி அந்த ஆணையத்தால் இந்திய குடிமகன்கள் / குடிமகள்கள் ஒவ்வொருவருக்கும் ஆதார் அட்டை வழங்கியுள்ளது. இந்த ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை அப்டேட் செய்வதற்கு ஆதார் மையங்களை தேடி அலைய வேண்டி இருக்கும். இந்தியாவில் இன்னும் கொரோனா அச்சம் நீடித்து வருவதால், உங்கள் வீட்டில் இருந்து கொண்டே மொபைல் போன் மூலமாக அப்டேட் செய்யும் வசதியை ஆதார் வழங்கும் ஆணையம் வழங்கியுள்ளது. இதன் மூலம் உங்கள் பெயர், பாலினம், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொழியை ஆன்லைனில் புதுப்பிக்கலாம்.

உங்கள் வீட்டின் குடும்பத் தலைவர் / பாதுகாவலர் விவரங்கள் அல்லது பயோமெட்ரிக் புதுப்பிப்பு போன்ற பிற மாற்றங்களுக்கு, நீங்கள் ஆதார் சேவா கேந்திரா அல்லது புதுப்பிப்பு மையத்தைப் அணுக வேண்டும்.

Aadhar Card Update Tamil News: ஆதார் எப்படி அப்டேட் செய்வது

மொபைல் போன் மூலம் ஆதார் எப்படி அப்டேட் செய்வது:

முதலில் இந்தியாவின் தனித்துவமான அடையாள ஆணையத்தின் (UIDAI) பக்கத்திற்கு செல்ல வேண்டும். இப்போது, ​​முகப்புப்பக்கத்தில், ‘ஆதார் புதுப்பிப்புக்கு தொடரவும்’ என்ற விருப்பத்தைப் பார்ப்பீர்கள். அதைக் கிளிக் செய்ய வேண்டும். அந்த பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர் அதில் கேட்கப்பட்டுள்ள கேப்ட்சாவை தட்டச்சு செய்ய வேண்டும். இப்போது உங்கள் மொபைல் போனில் நீங்கள் பெறும் ஒரு முறை கடவுச் சொல்லையை (OTP) அதில் பாஸ்சில் உள்ளிட வேண்டும். பின்னர் நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்களை அதில் உள்ளிடவும். அதன் அப்டேட் செய்ய வேண்டும்.

இப்போது, ​​நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து விவரங்களும் அடையாள ஆணையத்துடன் (UIDAI) பொருந்தினால், உங்களது மொபைல் போனுக்கு “வாழ்த்துக்கள்! மின்னஞ்சல் ஐடி எங்கள் பதிவுகளுடன் பொருந்துகிறது!” என்ற மெசேஜ் வரும்.

இது போன்று ஆன்லைனில் ஆதார் அப்டேட் செய்வதற்கு, நீங்கள் முதன் முதலாக ஆதார் எடுக்க பதிவு செய்த அலைபேசி எண் கண்டிப்பாக அவசியம். ஏனென்றால் நீங்கள் அப்டேட் செய்வதற்கு தேவையான ஒரு முறை கடவுச் சொல் எண் (OTP) அந்த அலைபேசிக்கே வரும். அந்த எண் இல்லையென்றால் உங்களால் அப்டேட் செய்ய இயலாது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Aadhar card tamil news how to update aadhaar using mobile phone with in ten minutes

Next Story
வருமான வரித் தாக்கலில் என்ன மாற்றங்கள்? 70 வயதுக்கு மேல் புதிய சலுகைwhat are changes in I-T filing and Senior citizens above 70 exempted from filing I-T returns -வருமான வரித் தாக்கலில் என்ன மாற்றங்கள்? 70 வயதுக்கு மேல் புதிய சலுகை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express