Advertisment

Aadhar Latest Update: ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டுமா? இதோ எளிய வழி

ஆதார் அட்டையில் ஒரு குறிப்பிட்ட தவறுகளை திருத்தம் செய்ய இந்த எளிய வழி. கொரோனா காலத்தில், மக்களின் சிரமத்தை போக்க இந்த எளிய வழி

author-image
WebDesk
New Update
Aadhar Latest Update: ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டுமா? இதோ எளிய வழி

Aadhar Card Update: இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமனுக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு சலுகைகள் மற்றும் வங்கி பரிவர்த்தனை என பல வகைகளில் ஆதார் அட்டை தவிர்க்க முடியாத ஆவணமாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் இந்த அட்டையில், தனது விபரங்கள் தவறாக உள்ளது என கூறி நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது விவரங்களை திருத்திக்கொள்ள அரசு அனுமதியுடன் இயங்கும் இ-சேவை மையத்தை அணுகி வருகின்றனர்.

Advertisment

ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்துள்ளதால், அரசு அலுவலகங்களில் தீவிர தடுப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அரசு அலுவலகங்கள் செல்லும் பயணாளிகளுக்கு தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு அலுவலங்களில் பணிகள் தாமதமாகும் நிலையில் பயணாளர்களும் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதனை சரி செய்யும் விதமாக, பயணாளர்கள் இணையதளம் மூலம் தங்களது வீட்டிலேயே தங்களது ஆதார் அட்டையின் விபரங்களை சரி செய்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணாளர்கள் ஆதார் சேவை மையங்களுக்கு வரவேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் இந்த வசதியின் மூலம் ஒருசில மாற்றங்களை மட்டுமே செய்ய முடியும். பிற மாற்றங்களுக்கு, அட்டைதாரர்கள் இன்னும் ஒரு ஆதார் மையத்தைதான் அணுக வேண்டும்..

ஆன்லைனில் ஆதார் அட்டைகளில் செய்ய முடியும் மாற்றங்கள் :

UIDAI இன் அறிவுறுத்தல்களின்படி, ஆதார் அட்டைதாரர்கள் தங்கள் ஆதார் அட்டை விவரங்களில் பெயர், பாலினம், பிறந்த தேதி, மொழி மற்றும் முகவரி என குறிப்பிடத்தக்க மாற்றங்களை மட்டுமே செய்ய முடியும். பயோமெட்ரிக் புகைப்படம், மற்றும் பாதுகாவலர் (காடியன்) அல்லது குடும்ப விவரங்கள் பிற மாற்றங்களுக்காக அட்டைதாரர்கள், ஆதார் சேவா கேந்திரா அல்லது பதிவு / ஆதார் அட்டை புதுப்பிக்கும் மையத்தைப் அணுக வேண்டும்.

UIDAI வலைதளத்தில், சென்று ஆதார் அட்டை விவரங்களை பதிவு செய்த பின்னர், பயணாளர்கள் தங்களது ஆதார் அட்டையில். பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஆதார் அங்கீகாரத்திற்காக ஒருமுறை கடவுச்சொல் (OTP) பெறுவார். அந்த கடவுச்சொல்லை உள்ளீடு செய்து சமர்பித்தால், பயணாளரின் மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை UIDAI இணையதளத்தில் சரிபார்க்கப்படும்.

அதனைத் தொடர்ந்து பயனர்கள் ஆதார் எண், அறிவிக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி அல்லது மொபைல் எண் மற்றும் பாதுகாப்பு குறியீடு போன்ற புதிய விவரங்களை நிரப்பி சமர்பித்து மீண்டும், அந்த பக்கத்தில் நிரப்பக்கூடிய OTP ஐப் பெறுவார்கள். இது உள்ளீடு செய்தபின் பயனாளரின் கோரிக்கை ஏற்கப்பட்டு, அதனை உறுதி செய்யும் விதமாக மின்னஞ்சல் ஐடி அல்லது மொபைல் எண்ணிக்கு ஒரு செய்தி அல்லது மின்னஞ்சல் அனுப்பப்படும்.

Aadhar Card
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment