Aadhar latest tamil news: கடந்த 2018 வெளியான உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி வருமான வரி அறிக்கையை (ஐ.டி.ஆர்) தாக்கல் செய்ய பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டள்ளது. அந்த வகையில், பான்-ஆதார் இணைப்பதற்கான 2021 மார்ச் 31-ந்தேதி வரை காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய வருமானவரித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த காலக்கெடுவுக்கு முன் அனைத்து இந்திய குடிமக்களும் தங்கள் பான் மற்றும் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்றும், அவ்வாறு இணைப்பு செய்ய தவறும் நபர்கள் தங்கள் வருமான வரியை தாக்கல் செய்ய முடியாது எனவும், மேலும் அவர்களின் பான் அதன்பிறகு செல்லாது எனவும் மத்திய வருமானவரி வாரியம் அறிவித்துள்ளது.
வருமான வரி இந்தியா இணையதளத்தில் பான்-ஆதார் இணைக்கும் வழிமுறை :
வருமான வரித்துறை இணையதளத்தில் உள்ளே சென்று, ‘இணைப்பு ஆதார்’ என்பதைக் கிளிக் செய்யவேண்டும். அதில் உங்கள் பான் மற்றும் ஆதார் விவரங்களை நிரப்பும் பகுதிக்கு மேலே உள்ள ‘இங்கே கிளிக் செய்க’ (Click here) என்பதைக் கிளிக் செய்து ஆதார் மற்றும் பான் விவரங்களை நிரப்பி, ‘ஆதார் இணைப்பு நிலையை காண்க’ (View Link Aadhaar status) என்பதைக் கிளிக் செய்யவும். அப்போது உங்கள் பான்-ஆதார் இணைக்கப்பட்டிருந்தால், உங்கள் ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்களுடன் ஆதார் பான் இணைப்பு உறுதி செய்யப்பட்ட தகவல் திரையில் காண்பிக்கப்படும்.
எஸ்.எம்.எஸ் வழியாக பான்-ஆதார் அட்டை இணைக்கும் முறை:
எஸ்.எம்.எஸ் வழியாக ஆதார் அட்டை மற்றும் பான் இணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது. பயனர்கள் தங்களது ஆதார் பான் இரு ஆவணங்களும் ஒரே பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் உங்கள் மொபைல் எண்ணும் ஆதாரில் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். இவை அனைத்தும் சரியாக இருந்தால், 12-இலக்க ஆதார் அட்டை எண் மற்றும் 10-எழுத்து எண் பான் விவரங்களை டைப் செய்து 567678 அல்லது 56161 க்கு எஸ்.எம்.எஸ் அனுப்பவும்.
எடுத்துக்காட்டுக்கு, உங்கள் ஆதார் எண் 109876543210 ஆகவும், உங்கள் பான் ABCD1234E, ஆக இருந்தால், UIDAI ஸ்பேஸ் 109876543210 ABCD1234E என டைப் செய்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்பவும். தொடர்ந்து, பான்-ஆதார் இணைப்பு வெற்றிகரமாக முடிந்த பிறகு உங்களுக்கு அறிவிக்கப்படும்.
ஆன்லைனில் பான்-ஆதார் அட்டையை இணைக்கும் வழிமுறை:
வருமானவரித்துறையின் இணையதளமான incometaxindiaefiling.gov.in- ல் சென்று ‘விரைவு இணைப்புகள்’ (குயிக் லிங்க்) பிரிவின் கீழ் இடது பக்கத்தில் உள்ள ‘ஆதார் இணைப்பு’ (லிங்க் ஆதார்) என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள பான், ஆதார் எண் மற்றும் தேவையான முக்கியமாக விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். அடுத்து கேப்ட்சாவை நிரப்பி சென்ட் ஓடிபி (OTP) கிளிக் செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து, ஒடிபி-யை நிரப்பி சமர்பிக்க வேண்டும். நீங்கள் பூர்த்தி செய்த விவரங்கள் சரியாக இருந்தால், உங்கள் பான்-ஆதார் வெற்றிகரமாக இணைக்கப்படும்.
ஆதார் – பான் விண்ணப்பங்கள் மூலம் இணைக்கும் வழிமுறை:
உங்கள் பான் மற்றும் ஆதார் இணைப்பை எழுத்துப்பூர்வமாக (ஆப்லைனில்) செய்ய வேண்டுமானால், நீங்கள் பான் சேவை மையத்தைப் அனுகலாம். அங்கு துணை ஆவணங்களுடன் ‘இணைப்பு -1’ படிவம் நிரப்பி, பான் மற்றும் ஆதார் அட்டையின் நகல் ஆகியவற்றை செலுத்த வேண்டும். ஆன்லைன் சேவைகள் போன்ற கட்டணமில்லாமல் இருக்கும் நிலையில், ஆப்லைன் சேவையில், பயனர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும்.
வருமான வரி இணையதளத்தில், பதிவுசெய்யப்பட்ட பயனர்களுக்கு பான் – ஆதார் இணைக்கும் வழி:
நீங்கள் ஏற்கனவே வருமான வரி மின்-தாக்கல் வலைத்தளத்தின் பதிவுசெய்த பயனாளராக இருந்தால், உங்கள் பான் ஏற்கனவே உங்கள் ஆதார் உடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். வருமான வரி மின்-தாக்கல் வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் நீங்கள் அதனை உறுதி செய்யலாம். அதில் உங்கள் பான் ஆதார் உடன் இணைக்கப்படவில்லை எனில், ஆன்லைனில் தோன்றும் படிவத்தில், பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம் ஆகியவற்றை பூர்த்தி செய்து சமர்ப்பி (சப்மிட்) என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு ஆதார் – பான் வெற்றிகரமாக இணைக்கப்பட்ட தகவல் உங்கள் திரையில் காண்பிக்கப்படும்.
பதிவு செய்யப்படாத பயனர்கள் பான் ஆதார் இணைக்கும் வழிமுறை:
உங்கள் பான் ஆதார் உடன் இணைக்க வருமான வரித் துறையின் மின்-தாக்கல் போர்ட்டலுக்குச் சென்று லிங்க் ஆதார் பிரிவில் கிளிக் செய்ய வேண்டும். அதன்பிறகு வரும் படிவத்தில், பான் எண், ஆதார் எண் மற்றும் நிரப்ப வேண்டிய பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், நிரப்பி சரிபார்த்த பிறகு கேப்ட்சா குறியீட்டை நிரப்பி, லிங்க் ஆதார் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அதன்பிறகு நிரப்பப்பட்ட விபரங்களை ஐ-டி துறை உறுதிப்படுத்திய பின்னர் உங்கள் ஆதார் – பான் இணைக்கப்படும்.