சமூக ஊடக கணக்குகளை ஆதார் உடன் இணைப்பதற்கான திட்டம் உங்களிடம் ஏதேனும் உள்ளதா? என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது. பல உயர் நீதிமன்றங்களில் விசாரிக்கும் வழக்குகளை எல்லாம் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி பேஸ்புக் அளித்த மனுவில் உச்ச நீதிமன்றம் இந்த கேள்வியைக் கேட்டது குறிப்பிடத் தக்கது.
பேஸ்புக்க்கு எதிராக மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் இரண்டு மனுக்களும், பம்பாய் மற்றும் மத்திய பிரதேச உயர் நீதிமன்றங்களில் தலா ஒரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த நான்கு மனுக்களின் அடிப்படை சாராம்சம் என்னவென்றால், பேஸ்புக் பயனர்களின் கணக்கோடு இனி ஆதார் எண் அல்லது அரசால் அங்கிகரிக்கப்பட்ட சான்றிதழோடு இணைக்கவாய்ப்பு உள்ளதா? இணைக்கவேண்டும்? என்ற கேள்வியத் தான் உள்ளடக்குகின்றன.
இது முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி என்பதால், ஒவ்வொரு உயர் நீதிமன்றத்திலும் ஒவ்வொரு முரண்பட்ட முடிவுகள் வரும். எனவே எல்லா வழக்குகளையும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்று வேண்டும் என்று பேஸ்புக் கோரியுள்ளது. ஏனெனில் ஆதாரை சமூக ஊடக தளங்களுடன் இணைக்க முற்படும் வாதம் இந்திய மக்களின் அடிப்படை உரிமையும், பேஸ்புக் நிறுவனத்தின் அடிப்படை சித்தாந்தங்களையும் கேள்விக் குறியாக்கும் என்று அந்நிறுவனம் எண்ணுகிறது.
பேஸ்புக் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா "சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம், ஆனால் இறுதி தீர்ப்பு எதுவும் பிறப்பிக்கக் கூடாது எனவும், சமூக ஊடக கணக்குகளை ஆதார் உடன் இணைப்பதற்கான திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா, அதை எங்களிடம் தெளிவுப் படுத்துங்கள் என்ற கேள்வியையும் முன்வைத்தார். மேலும், வரும் செப்டம்பர் 24 வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணை நடக்க விருக்கிறது.