Aadhar Update @uidai.gov.in Tamil News: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), தற்போது இணைய பக்கங்கள் மூலமாக முகவரியை அப்டேட் செய்வதற்கான புதிய இணைய பக்கத்தை துவங்கி உள்ளது. உங்களது ஆதார் அட்டையில் உள்ள முகவரியில் எழுத்து பிழையோ அல்லது நீங்கள் வேறு முகவரியை மாற்ற வேண்டும் என்றாலோ அவற்றை இந்த இணைய பக்கத்தின் மூலமாக மாற்றலாம். ஒரு வேளை இ-சேவை மையங்களுக்கு சென்று முகவரியை மாற்றி இருந்தால் இந்த இணைய பக்கத்தின் மூலம் அவைகளை அப்டேட் செய்து கொள்ளலாம்.
உங்கள் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை சரி பார்க்க, மற்றும் அப்டேட் செய்ய இந்த இணையபக்கங்களை விசிட் செய்யுங்கள். (ssup.uidai.gov.in/ssup/.) .
இந்த இணைய பக்கத்தில் எப்படி ஆதார் அட்டை முகவரியை மாற்றுவது அல்லது சரிசெய்வது அல்லது புதுப்பிப்பது?
/tamil-ie/media/media_files/uploads/2021/01/aadhar-card-1-300x166.jpg)
இந்த இணைய (https://ssup.uidai.gov.in/ssup/ ) லிங்கை க்ளிக் செய்ய வேண்டும். இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) இணைய பக்கம் தோன்றும் . அந்த இணைய பக்கத்தில் உங்களது அலைபேசி எண்ணை கொடுக்க வேண்டும். பின்னர் 12 இலக்க ஆதார் எண்ணையும் அதில் பதிவிட வேண்டும். நீங்கள் முதன் முதலில் ஆதார் அட்டை எடுக்க வழங்கிய அலைபேசிக்கு எண்ணுக்கு 6 இலக்க ஓடிபி (OTP) எண்கள் வரும். இப்போது அந்த 6 இலக்க ஓடிபி -யை அந்த இணைய பக்கத்தில் பதிவிட வேண்டும். இப்போது ஆதார் பக்கத்திற்கு உள்ளே நுழைய அனுமதி கிடைக்கும். அந்த பக்கத்தில் கேட்க்கும் தகவல்களை சரியாக வழங்க வேண்டும்.
அந்த இணைய பக்கத்தில் உங்கள் முகவரியை அப்டேட் செய்ய சில ஆவணங்களை ஸ்கேன் செய்து சமர்ப்பிக்க வேண்டும். இவற்றை வழங்கிய பின்னர் உங்கள் அலைபேசி எண்ணுக்கு புதுப்பிப்பு கோரிக்கை விடுத்த எண் வரும். அதை பத்திரமாக சேமித்து வைக்க வேண்டும். அந்த எண்ணைக் கொண்டே உங்களது முகவரி அப்டேட் ஆகி விட்டதா என்பதை சரிபார்க்க இயலும்.
Aadhar Update @uidai.gov.in Tamil News: முகவரி அப்டேட்
முகவரி அப்டேட் ஆகியுள்ளதா என்பதை எப்படி சரிபார்க்கலாம்?
/tamil-ie/media/media_files/uploads/2021/01/aadhar-card-2-300x166.jpg)
இந்த இணைய பக்கத்தை (https://ssup.uidai.gov.in/checkSSUPStatus/checkupdatestatus) க்ளிக் செய்ய வேண்டும்.
12 இலக்க ஆதார் எண் மற்றும் புதுப்பிப்பு கோரிக்கை விடுத்த எண் ஆகியவற்றை பதிவிடவும். இப்போது உங்கள் அலைபேசிக்கு ஓடிபி (OTP) எண் வரும். பின்னர் அந்த இணை பக்கத்தில் உங்கள் முகவரி அப்டேட் ஆகியுள்ளதா என்பதை நீங்கள் பார்க்கலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"