டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ நாளை கைது செய்யும் என்று ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது. மேலும், அக்கட்சி இதை குஜராத் தேர்தலுடன் தொடர்புபடுத்தியுள்ளது.
டெல்லியில் புதிய மதுக் கொள்கை தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நாளை காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சி.பி.ஐ சம்மன் அனுப்பியுள்ளது. சி.பி.ஐ சம்மன் அனுப்பியது குறித்து மணீஷ் சிசோடியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி பரபரப்பான தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சிசோடியா கடந்த இரண்டு மாதங்களாக குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் சிசோடியாவும் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து குஜராத் மாநிலத்திற்குச் சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆம் ஆத்மி கட்சி குஜராத்தில் பரபரப்பான தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ திங்கள்கிழமை கைது செய்யும் என்று ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. திங்கள்கிழமை காலை 11 மணிக்கு மத்திய ஏஜென்சியால் தனக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக சிசோடியா இதற்கு முன்னர் ட்வீட் செய்திருந்தார்.
மணீஷ் சிசோடியா பதிவிட்ட ட்வீட்டில், “சி.பி.ஐ எனது வீட்டில் 14 மணி நேரம் சோதனை நடத்தியது. எனது வங்கி லாக்கரில் தேடினார்கள். எதுவும் கிடைக்கவில்லை. எனது கிராமத்திலும் அவர்கள் எதையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. இப்போது நாளை காலை 11 மணிக்கு சிபிஐ தலைமையகத்துக்கு என்னை விசாரணைக்கு அழைத்திருக்கிறார்கள். நான் சென்று விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன். சத்யமேவ ஜெயதே” என்று ட்வீட் செய்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், மணீஷ் சிசோடியா திங்கள்கிழமையே கைது செய்யப்படுவார் என்றும், இந்த நடவடிக்கையை குஜராத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுடன் தொடர்புபடுத்துவதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து பரத்வாஜ் கூறுகையில், “டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவர் நாளை மத்திய அரசின் சி.பி.ஐ-யால் கைது செய்யப்படுவார். டெல்லியில் கலால் வரித்துறை ஊழல் ரூ.10,000 கோடி என்றும், இந்த ஊழலில் மணீஷ் சிசோடியா ஜி ரூ.10,000 கோடி சம்பாதித்ததாகவும் கூறப்பட்டது. குறைந்தது 500 இடங்களில் சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை இயக்குனரகம் சோதனை நடத்தியது. மணீஷ் சிசோடியா வீட்டில் 14 மணி நேரம் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். காலை வரை அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பணம், சொத்து ஆவணங்கள், பினாமி சொத்துக்களை கண்டுபிடித்தார்களா? அவருடைய வங்கி லாக்கரிலோ, அவருடைய கிராமத்திலோ அல்லது 500 இடங்களில் எதையாவது கண்டுபிடித்தார்களா? என்றால் இல்லை. நாளை, மணீஷ் சிசோடியா கைது செய்யப்படும்போது, அது கலால் கொள்கை பற்றி அல்ல, மாறாக குஜராத் தேர்தல் பற்றியதாக இருக்கும்” என்று பரத்வாஜ் கூறினார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் சிசோடியாவும் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து அம்மாநிலத்திற்குச் சென்று பிரச்சாரம் செய்ததன் மூலம் ஆம் ஆத்மி கட்சி குஜராத்தில் பரபரப்பான தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. மணீஷ் சிசோடியா சமீபத்தில் 6 நாள் பிரச்சாரத்திற்காக குஜராத் சென்றார்.
“குஜராத் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், அங்கு பா.ஜ.க-வும் ஆம் ஆத்மி கட்சியும் நேரடிப் போட்டியில் உள்ளன. பா.ஜ.க.வினர் கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். வரும் ஒரு மாதத்தில், மாநிலத்தில் மணீஷ் சிசோடியாவின் திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், எங்கள் தலைவர்களை கைது செய்தால் எங்கள் கட்சி வலுவிழந்துவிடும் என்று மத்திய அரசும், பா.ஜ.க-வும் நினைத்தால், நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள் என்று அர்த்தம். ஆம் ஆத்மி கட்சி வலுவடையும் என்பதை காலம் சொல்லும். மணீஷ் சிசோடியா ஏன் கைது செய்யப்படுகிறார் என்பது தெளிவாக உள்ளது. குஜராத் மக்களுக்கு தெரியும்… அவர்கள் பயன்படுத்தும் அதே செயல் முறை. அவர்கள் மற்ற தலைவர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தியுள்ளனர்… அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்படுவார்” என்று பரத்வாஜ் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.