டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி கட்சி, கேரளா வெற்றிகரமான அரசியல் கூட்டணிகளின் நீண்ட வரலாற்றைக் கொண்டது என்பதை உணர்ந்துள்ளது. முக்கியமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) குறித்து உணர்ந்துள்ளது – இப்போது முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலை உள்ளது.
ஆடை தயாரிப்பு நிறுவனமான கைடெக்ஸ் (KITEX) குழுமத்தின் சி.எஸ்.ஆர் பிரிவான கேரளாவைத் தளமாக்க்கொண்ட டிவெண்டி20 உடன் ஒரு புதிய அரசியல் முன்னணியை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், கேரள மக்கள் தேர்வு செய்ய இரண்டு வாய்ப்புகள் உள்ளன – “குற்றச் செயல்கள் மற்றும் கலவரங்களில் ஈடுபடும் அரசியல் கட்சிகள் அல்லது மக்களின் நலனுக்காக செயல்படும் ஆம் ஆத்மி மற்றும் டுவென்டி 20 போன்ற நேர்மையான கட்சிகள் உள்ளன” என்று கூறினார்.
கொச்சிக்கு அருகிலுள்ள கிழக்கம்பலத்தில் நடைபெற்ற மாநாட்டில் மக்கள் நலக் கூட்டணியின் டுவென்டி 20 தலைமை ஒருங்கிணைப்பாளரும், கைடெக்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான சாபு எம் ஜேக்கப்புடன் சேர்ந்தூ கெஜ்ரிவால் அறிவித்தார். கீழக்கம்பலத்தில் கைடெக்ஸ் குழுமத்தின் தலைமையகமும் டிவெண்டி20 தலைமையகமும் உள்ளது.
டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி கட்சி, கேரளா வெற்றிகரமான அரசியல் கூட்டணிகளின் நீண்ட வரலாற்றைக் கொண்டது என்பதை உணர்ந்துள்ளது. முக்கியமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) – இதற்கு முன்பு இருந்ததைவிட முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலையாக உள்ளது.
கேரளாவில் உள்ள மற்ற கூட்டணியான, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அதன் முக்கிய கூட்டணி கட்சியான பாரத் தர்ம ஜன சேனாவுடன் ஒரு இறுக்கமான உறவைப் பகிர்ந்துகொள்வதால், அக்கட்சி கூட்டணியில் இருந்து முழுமையாக வெளியேறவில்லை.
2015 இல் உள்ளாட்சி அரசியலில் களமிறங்கிய கீழக்கம்பலம் உட்பட கேரளாவில் உள்ள நான்கு கிராம பஞ்சாயத்துகளை டிவெண்டி20 அமைப்பு நிர்வகிக்கிறது. டிவெண்டி20 அமைப்பு 2021 ஆம் ஆண்டில் எர்ணாகுளத்தில் ஒரு சில தொகுதிகளில் போட்டியிட்டு சட்டமன்றத் தேர்தலில் முதலில் போட்டியிட்டது. ஆனால், பின்னர், சிபிஎம்-இன் பி டீம்மா தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது என்று குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டதால், இந்த கார்ப்பரேட் நிறுவனத்தின் அமைப்பு அது போட்டியிட்ட எட்டு தொகுதிகளில் 6 தொகுதிகளில் 3வது இடத்தைப் பிடித்தது. பாஜகவை நான்காவது இடத்திற்கு தள்ளியது.
கைடெக்ஸ் குழுமத்தின் சி.எச்.ஆர் செயல்பாடுகளின் நற்பெயரின் அடிப்படையில், இந்த அணி ஓரளவு கௌரமான வாக்குகளைப் பெற முடிந்தது. அரசியல் சார்பற்ற வாக்காளர்கள் மற்றும் பாரம்பரிய அரசியல் கட்சிகளைத் தாண்டி பார்க்க விரும்பும் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினருக்கு கவர்ச்சிகரமான தேர்வாக இந்த அமைப்பு இருப்பதை உணர்ந்தனர்.
மறுபுறம், கேரளாவில் ஒரு கிராம பஞ்சாயத்து அளவில் கூட ஆம் ஆத்மி கட்சி இன்னும் தனது இருப்பை வெளிப்படுத்தவில்லை. அக்கட்சி 2014 ஆம் ஆண்டு கேரளப் பிரிவை உருவாக்கி, அந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஒரு சில இடங்களில் போட்டியிட்டது. இருப்பினும், அக்கட்சி, கேரளாவில் இன்னும் ஒரு எழுச்சியூட்டும் தலைமையையோ அல்லது தற்போதுள்ள அரசியல் கட்சிகளில் இருந்து தனித்து காணப்படும் அரசியல் நிகழ்ச்சிகளையோ கொண்டு வரவில்லை. 2020 ஆம் ஆண்டில், சர்ச் ஆதரவு விவசாயிகள் இயக்கமான இன்ஃபார்ம் (INFARM) உடன் தொடர்புடைய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.சி. சிரியாக், ஆம் ஆத்மி கடியின் கேரள மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், ஆம் ஆத்மி கேரளாவுக்குள் நுழைய முயற்சிக்கும் போது டிவெண்டி20 முதுகில் தூக்கி செல்ல வேண்டும். ஆனால், மக்கள் நலக் கூட்டணி எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் என்னவென்றால், குறைந்தபட்சம் இப்போதைக்கு, அதன் அடிப்படையான டுவென்டி-20, எர்ணாகுளம் மாவட்டத்திலும், அதுவும் ஒரு சில பஞ்சாயத்துகளில் மட்டுமே உள்ளது.
இது ஒரு கடுமையான போராட்டம் என்பது கெஜ்ரிவாலுக்கு நன்றாகவே தெரியும். தற்போதைக்கு, டிவெண்டி20 – ஆம் ஆத்மி கட்சி இணைந்து மே 31-ஆம் தேதி நடைபெறவுள்ள திருக்காக்கரா சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், அதற்குப் பதிலாக 2024 பொதுத் தேர்தலில் கவனம் செலுத்துவது என்றும் டிவெண்டி20 – ஆம் ஆத்மி கூட்டணி முடிவு செய்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அன்று கூட்டணியை அறிவிக்கும் போது, டெல்லியில் ஆம் ஆத்மி அரசின் சாதனைகள் மற்றும் மக்கள் நல நடவடிக்கைகள் குறித்து பேசிய கெஜ்ரிவால், கேரளாவிலும் இதை செய்ய முடியும் என்று கூறினார். மேலும், அவர் நாட்டில் 130 கோடி மக்களைக் கொண்ட கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய டிவென்டி 20 ஒருங்கிணைப்பாளர் ஜேக்கப், கேரளாவில் உள்ள சிபிஐ (எம்) அரசாங்கத்தை குறிவைத்து, முன்மொழியப்பட்ட கே-ரயில் திட்டம் கேரளாவை அழிக்கும் என்று கூறினார். “போக்குவரத்து பேருந்து சேவையை லாபகரமாக நடத்த முடியாத அரசுதான் மாநிலத்தில் உள்ளது. அப்படிப்பட்ட அரசால் ரூ.62,000 கோடியில் கே-ரயில் திட்டத்தை எப்படி நடத்த முடியும்” என்று கேள்வி எழுப்பினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“