Advertisment

2017 சட்டப்பேரவை தேர்தல்.. குஜராத், ஹிமாச்சலில் 3ஆம் இடம்பிடித்த நோட்டா

2017 சட்டப்பேரவை தேர்தலில் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் நோட்டா 3ஆம் இடம் பிடித்தது.

author-image
WebDesk
New Update
AAP in fray a 2017 detail NOTA 3rd in 115 seats in Gujarat 12 in Himachal

ஆகஸ்ட் 17, 2022 புதுடெல்லியின் டால்கடோரா ஸ்டேடியத்தில் மேக் இந்தியா நம்பர் 1 என்ற இயக்கத்தின் தொடக்க விழாவில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றிய போது எடுத்த படம்.

2017 சட்டப்பேரவை தேர்தலில் குஜராத்தில் உள்ள 182 இடங்களில் 115 இடங்களிலும், ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 68 இடங்களில் 12 இடங்களிலும் நோட்டா மூன்றாம் இடம் பிடித்தது.

அந்த வகையில், குஜராத்தில் உள்ள 3 கோடி வாக்காளர்களில் 5.51 லட்சம் வாக்காளர்கள், அதாவது 1.84% பேர் நோட்டாவைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

ஹிமாச்சல் பிரதேசத்தை பொறுத்தவரை 37.84 லட்சம் வாக்காளர்களில் 34,232 வாக்காளர்கள், அதாவது 0.90% வாக்காளர்கள் நோட்டாவிற்கு வாக்களித்துள்ளனர்.

இதனால் குஜராத்தில் பாஜக (49.05%) மற்றும் காங்கிரஸுக்கு (41.44%) அடுத்து, NOTAவின் ஒட்டுமொத்த வாக்குப் பங்கு மூன்றாவது இடத்தில் 1.84% ஆக இருந்தது. மேலும், போட்டியிட்ட 794 பேரில் சுயேச்சைகள் 3 பேர் வெற்றி பெற்றனர்.

அதேபோல், ஹிமாச்சல் தேர்தல்களில், பாஜக (48.79%), காங்கிரஸ் (41.68%) மற்றும் சிபிஐ(எம்) (1.47%) ஆகியவற்றுக்குப் பிறகு நோட்டாவின் வாக்குகள் நான்காவது அதிகபட்சமாக (0.90%) இருந்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nota Arvind Kejriwal Gujarat Aap
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment