scorecardresearch

வெளியான அந்தரங்க வீடியோ: சிக்கலில் ஆம் ஆத்மி எம்எல்ஏ!

“மனைவியுடன் அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அவர் அதனை காட்சிப்படுத்துவார் என்று நினைக்கவில்லை. அரசியல்கட்சியினரின் தூண்டுதலால் இது நடக்கிறது.

Punjab MLA in spot over ‘bigamy’, ‘intimate’ video
ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா

பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ தனது இரண்டாவது மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் காணொலி வெளியாகி மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் முதல் முறையாக எம்எல்ஏ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா. இவர் இரண்டாவது மனைவியுடன் அந்தரங்க உரையாடலில் நெருக்கமாக இருக்கும் காணொலி ஒன்று வெளியாகி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்த எம்எல்ஏ ஹர்மீத், ‘தாம் இரண்டாவது மனைவியால் பாதிக்கப்பட்டுள்ளேன். இது தனது தனிப்பட்ட விஷயம்’ என்றார்.
மேலும் தாம் இரண்டாம் திருமணம் செய்துகொண்டது முதலமைச்சரும், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தெரியும் எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “தமது முதல் மனைவி நோய்வாய்பட்டு இருந்தார். அப்போது இரண்டாவதாக திருமணம் செய்துகொண்ட பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டது. என் முதல் மனைவி மற்றும் குழந்தைகள் சாட்சியாக நான் அவரை திருமணம் செய்துகொண்டேன் என்றார்.
இதனை மறுத்துள்ள இரண்டாம் மனைவி, “தாம் வாடகை வீட்டில் இருந்த போது எம்எல்ஏ ஹர்மீத்துடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவர்தான் தனக்கு பிளாட் வாங்கித் தந்தார் என்றும் தற்போது அந்த பிளாட்டில் வசிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் என காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார். இதற்கிடையில் எம்எல்ஏ ஹர்மீத் குறித்து கருத்து தெரிவித்த அவரின் தந்தை, ‘ஹர்மீத் நிலையான மனநிலை கொண்டவர் கிடையாது. முதலில் ஷிரோமணி அகாலிதளம் கட்சியில் பயணித்தார்.
சிறிது நாள்களில் காங்கிரஸ் என மற்ற கட்சிகளிலும் சேர்ந்து கொண்டார். தற்போது ஆம் ஆத்மியில் உள்ளார்” என்றார். இந்த நிலையில் இரண்டாம் மனைவி கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஹர்மீத், “தாம் ஷிரோமணி அகாலிதளம் கட்சியின் வேட்பாளரை தோற்கடித்தேன். ஆகையால் யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் என் மீது இரண்டாம் மனைவி புகார் அளித்துள்ளார்” என்றார்.

மேலும் இரண்டாவது மனைவியுடன் நெருக்கமாக இருந்த காணொலி காட்சிகள் வெளியானது குறித்து விளக்கம் அளித்த ஹர்மீத், “மனைவியுடன் அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அவர் அதனை காட்சிப்படுத்துவார் என்று நினைக்கவில்லை. அரசியல்கட்சியினரின் தூண்டுதலால் இது நடக்கிறது” என்றார்.

46 வயதான ஆம் ஆத்மி எம்எல்ஏ ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா, 49 ஆயிரத்து 112 வாக்குகள் வித்தியாசத்தில் பாட்டியாலாவில் உள்ள சனூர் தொகுதியில் ஷிரோமணி அகாலிதளம் கட்சியின் எம்எல்ஏ பால் சிங் சந்துமஜ்ராவை தோற்கடித்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Aap is fresh trouble punjab mla in spot over bigamy intimate video