ஆங்கிலத்தில் படிக்க...
டெல்லி அரசின் கலால் கொள்கை வழக்கில் பணமோசடி விசாரணை தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங், அமலாக்க இயக்குநரகத்தால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி அரசின் கலால் கொள்கை பணமோசடி வழக்கில் ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது இதே வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரான சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை 7 மணி முதல் புதுடெல்லி மாவட்டத்தில் உள்ள சஞ்சய் சிங்கின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த கைது நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், சஞ்சய் சிங்கின் கைது "முற்றிலும் சட்டவிரோதமானது" இது மோடி ஜியின் அவநம்பிக்கையை காட்டுகிறது. இதில் மேலும் பல எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்வார்கள்…” என்று கூறியள்ளார்.
இதற்கிடையில், சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, ஆம் ஆத்மி கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால், சஞ்சய் சிங்கின் வீட்டின் முன்வாசலில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமலாக்கத்துறை வழக்குத் தொடரப்பட்ட புகாரில் தொழிலதிபர் தினேஷ் அரோராவின் அறிக்கையின் ஒரு பகுதியாக சஞ்சய் சிங் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அவர் முதலில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங்கை சந்தித்ததாகவும், அவர் மூலம் சிசோடியாவை உணவகத்தில் பார்ட்டியின் போது சந்தித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து சங்சய் சிங்கின் வேண்டுகோளின் பேரில்... டெல்லியில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக கட்சி நிதியை வசூலிப்பதற்காக ரூ. 82 லட்சம் (சிசோடியாவிடம் ஒப்படைக்கப்பட்டது) காசோலைகளை ஏற்பாடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான தொழிலதிபர் தினேஷ் அரோராவின், மனிஷ் சிசோடியாவிடம் 5-6 முறை" பேசியதாகவும், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது இல்லத்தில் சஞ்சய் சிங்குடன் சந்தித்ததாகவும் அரோராவின் புகாரில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
இது குறித்து மற்றொரு பதிவை வெளியிட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், , அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தோற்கப்போகும் ஒரு கட்சியின் அவநம்பிக்கையான முயற்சி இந்த ரெய்டு. கடந்த ஆண்டில் அமலாக்கத்துறை பல சோதனைகளை நடத்தியயும் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“