கோவாவில் பிப்ரவரி 14 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பரப்பரைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஆம் ஆத்மி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) போன்ற கட்சிகள் வெளியே இருந்து வந்தன. அவை மாநில வளர்ச்சிக்காக வரவில்லை. கட்சியை விரிவுப்படுத்துவே வந்ததாக தெரிவித்தார்.
செயின்ட் குரூஸ் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா, “ஆம் ஆத்மி கட்சியும் டிஎம்சியும் உங்களுக்கு ஒரு நிலையான அரசாங்கத்தை கொடுக்க முடியாது. அவர்கள் வெளியே இருந்து வந்தவர்கள். கட்சியை விரிவுப்படுத்தும் நோக்கில் மட்டுமே செயல்படுகின்றனர். கோவாவை முன்னேற்று பாதையில் கொண்டு செல்ல வரவில்லை. அரசாங்கத்தை சிதைக்க வரும் அனைத்து கட்சிகளும், வெளியில் இருந்து வருபவர்களும் கோவாவை இயக்க முடியாது” என்றார்.
கோவா சட்டசபை தேர்தலில், பார்வர்டு கட்சியுடன் (ஜிஎஃப்பி) கூட்டணி அமைத்து காங்கிரஸ்
திங்களன்று, பிரியங்கா தெற்கு கோவாவில் உள்ள மஜோர்டா, நுவேம் மற்றும் நவேலிம் மற்றும் வடக்கு கோவாவில் உள்ள செயின்ட் ஆண்ட்ரே, செயின்ட் குரூஸ், கம்பர்ஜுவா மற்றும் பனாஜி ஆகிய இடங்களில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், ” மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான உரையாடல் வளர்ச்சி, வேலையில்லா திண்டாட்டம் குறித்து இருக்க வேண்டும். மக்கள் அவர்களை பொறுப்பாக்க வேண்டும்.
ஒரு சித்தாந்தம் பெண்கள் என்ன அணிய வேண்டும் என்று சொல்கிறது. அது உங்கள் மதங்களை மறுவரையறை செய்கிறது. அப்படி இருக்கக் கூடாது என்றார்.
தொடர்ந்து, மொல்லம் தேசியப் பூங்காவில் நூற்றுக்கணக்கான மரங்களை வெட்டுவதற்கான மூன்று நேரியல் திட்டங்களை ரத்து செய்வதாக கட்சி தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார்.
பாஜகவின் இந்த மூன்று திட்டங்களால் கோவா மக்களில் யாருக்கும் பயனில்லை. மாறாக, அதிகாரத்தில் நீடிக்க வேண்டும் என்பதற்காகவும், பெரிய தொழிலதிபர்களாக இருக்கும் தங்கள் நண்பர்களுக்குப் பலன் அளிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே என திட்டவட்டமாக தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil