பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. புதன்கிழமை பகவந்த் மான் முதல்வராக பதவியேற்ற சில மணி நேரங்களில், மாநிலங்களைவைக்கு அனுப்பப்படும் எம்.பி.க்கள் பரிந்துரை பட்டியலில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் பெயரும் இருப்பதாக ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியின் பலம் 3 ஆகும். இதுதவிர, ஜலந்தரில் அமையவுள்ள விளையாட்டு பல்கலைக்கழகத்தின் பொறுப்பாளராகவும் ஹர்பஜன் சிங் நியமிக்கப்படுவார் என தெரிகிறது.
மார்ச் 10 அன்று, ஆம் ஆத்மி வெற்றி குறித்து பதிவிட்ட ஹர்பஜன் சிங், பஞ்சாப்பில் ஆட்சி அமைக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் புதிதாக முதல்வர் பொறுப்பேற்றுள்ள தனது நண்பர் பகவந்த் மானுக்கும் வாழ்த்துகள். பகத் சிங்கின் பூர்வீக கிராமத்தில் அவர் பதவியேற்றுக் கொண்டுள்ளது சிறப்பானதாகும். இது நம் எல்லோருக்கும் பெருமையான தருணம் என குறிப்பிட்டிருந்தார்.
மூவி பிரேக்
காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்துக்கு பாஜக ஆளும் மாநிலங்களில் வரிவிலக்கு அளித்தது மட்டுமின்றி கட்சி சார்பில் சிறப்பு காட்சிக்கும் ஏற்பாடு செய்கின்றனர்.புதன்கிழமை மாலை, டெல்லியில் உள்ள பாஜக எம்.பிக்களுக்கும், அமைச்சர்களுக்கும் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அமைச்சர்கள் கிரண் ரிஜிஜ்ஜு, அஸ்வினி குமார் சௌபே கலந்துகொண்டனர்.
மத்தியப் பிரதேச பாஜக தலைவரும், மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் மகனுமான பிரபால் பிரதாப், கட்சித் தலைவர்களை மூவி பார்க்க அழைப்பு விடுத்தார். இதற்கு ஒரு நாள் முன்பு, டெல்லி பாஜக பிரிவு, கட்சித் தலைவர்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. வரும் நாட்களில் மாநில பிரிவு நிர்வாகிகள் பார்க்கும் வகையிலும், சிறப்பு காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும் என கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.
ஸ்லோ ஸ்டார்ட்
இந்தியாவில் 12-14 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ள நிலையில், அதற்கான முதல் நாள் ரெஸ்பான்ஸ் மந்தமாகவே இருந்துள்ளது. வெறும் 3 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளனர். ஆனால், 15 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கிய சமயத்தில் 37 லட்சத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதுகுறித்து பேசிய சுகாதார அமைச்சகம், 12-14 வயதினருக்கு தடுப்பூசி செலுத்த தொடங்கிய சமயத்தில், பள்ளிகளில் தேர்வுகளும், ஹோலி கொண்டாடங்களும் இருக்கின்றன. தடுப்பூசி செலுத்தும் வேகம் ஹோலிக்குப் பிறகு அதிகரிக்கும் என்று தெரிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil