ஆரோக்கிய சேது ஆப் எப்படி உதவியது? WHO விளக்கம்

கோவிட்- 19 பரவல் இணைப்புச் சங்கிலியை தகர்க்கும் தொடர்பு தடமரிதல், சுய-தனிமைப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை வலியுறுத்தினார்.

உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் , இந்தியாவின்   கைபேசி செயலியான ஆரோக்யா சேது தொற்று தொடர்பைக் கண்டறிதல், பாதிப்பு அதிகமான பகுதிகளை வரையறுத்துல் போன்ற பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு உதவியாக தெரிவித்தார்.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய  அவர், ” கோவிட்- 19 பரவல் இணைப்புச் சங்கிலியை தகர்க்கும் தொடர்பு தடமரிதல், சுய-தனிமைப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை வலியுறுத்தினார். மேலும், கைபேசி செயலி போன்ற தொழில்நுட்பங்கள் முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை அதிக செயல்திறன் கொண்டவையாக மாற்றுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

“இந்தியாவில் 150 மில்லியன் பயனர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆரோக்யா சேது செயலி நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்தது” என்றும்  தெரிவித்தார்.


இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், இந்தியா ஆரோக்கிய சேது என்னும் கைபேசி செயலியை அறிமுகப்படுத்தியது. புளூடூத் அடிப்படையிலான இந்தச் செயலி, கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு உதவும் வகையில், தொற்று தொடர்பைக் கண்டறிதல், பாதிப்பு அதிகமான பகுதிகளை வரையறுத்துல்,  கோவிட்-19 பற்றிய உரிய தகவல்களைப் பரப்புதல் ஆகிய நோக்கங்களுக்காகத் தொடங்கப்பட்டது.

இருப்பினும், ஆரோக்கிய சேது செயலி தொடர்பு தடமரிதலை தாண்டி தனியுரிமை பாதுகாப்பு மீறல் மற்றும் அரசு கண்காணிப்புக்கு வழிவகுக்கும் என பல நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். இதன் காரணாமாக, ஆரோக்கிய சேதுவின் ஆதாரக்குறியீடு தற்போது திறந்தநிலை ஆதாரமாக  அறிவிக்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Aarogya setu has helped to identify covid 19 clusters

Next Story
ஹத்ராஸ் பெண் தகனம்: தங்கள் விருப்பத்திற்கு மாறாக நடந்ததாக பெற்றோர் புகார்Cremation against our wishes, Hathras victim’s family to Allahabad HC
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express