/tamil-ie/media/media_files/uploads/2020/12/sr-abhaya-1200.jpg)
Abhaya murder case: Priest, nun sentenced to life imprisonment by CBI court : நீண்ட ஆண்டுகளாக துப்பு துலங்காத கொலை வழக்குகளில் ஒன்றாக பார்க்கப்பட்டது கன்னியாஸ்திரி அபயாவின் கொலை வழக்கு. 1992ம் ஆண்டு, கோட்டயம், பியூஸ் கான்வெண்ட் ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தவர் கத்தோலிக்க கன்னியாஸ்திரி அபயா. அப்போது அவருக்கு வயது 19.
தேர்வுகளுக்கு படிக்க அதிகாலை எழுந்த அவர் சமையலறைக்கு தண்ணீர் குடிக்க சென்ற போது, அவர் படித்த கல்லூரி பேராசிரியரான பாதிரியார் தாமஸ் கோட்டூர், பாதிரியார் ஜோஸ் புத்திரிக்கையிலுடன் கன்னியாஸ்திரி செபி உறவில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த விவகாரம் வெளியே தெரிந்து விடக் கூடாது என்று பாதிரியார் தாமஸ் கோட்டூர் மற்றும் கன்னியாஸ்திரி செபி, அபயாவை கொலை செய்து கான்வெண்ட்டில் இருக்கும் கிணற்றுக்குள் தள்ளிவிட்டனர்.
மேலும் படிக்க : கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கு; 28 வருடங்களுக்கு பிறகு குற்றவாளிகள் அறிவிப்பு
1993ம் ஆண்டு சி.பி.ஐ விசாராணை துவங்கிய போதும், குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்கப்படாமல் சிக்கல் நிறைந்த வழக்காக இது இருந்தது. 2008ம் ஆண்டு நவம்பர் மாதம், கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கில் துப்பு துலங்கியது. உண்மையை சொல்ல வைக்கும் சோதனையில் ஈடுபடுத்தப்பட்ட செபி மற்றும் கோட்டூர் தங்களின் குற்றங்களை கூற, அதனை எடிட் செய்து நீதிமன்றத்தில் சமர்பித்தது பெங்களூரு சோதனைக் கூடம். இதனை கண்டறிந்த சி.பி.ஐ. விசாரணையை தீவிரப்படுத்தி மூவரையும் கைது செய்தனர். 2009ம் ஆண்டில் சிறைக்கு சென்றுவர்கள் பிணையில் வெளியே வந்தனர்.
இந்நிலையில் இன்று இந்த வழக்கில் கேரளா சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியுள்ளது. செபி மற்றும் தாமஸ் கோட்டூர் குற்றவாளிகள் என்று நேற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் இருவருக்கும் இன்று ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளாக கருதப்பட்ட 49 நபர்களில் 8 பேர் பிறழ் சாட்சியம் கொடுத்தனர். அபயா கொலையான நாளில் கான்வெண்டிற்கு திருட சென்ற ”அடைக்கா ராஜா” அன்று அதிகாலை இருவர் அந்த கட்டிடத்தில் இருந்து வெளியேறி சென்றனர் என்று கூறிய சாட்சியம் இவ்வழக்கின் திருப்பு முனையாக அமைந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.