பாகிஸ்தான் பிடியில் இருந்து மீண்ட விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார்.
இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் எல்லையில் நடந்த எதிர் தாக்குதலின் போது பாகிஸ்தான் பிடியில் சிக்கினார். சுமார் 60 மணி நேரத்திற்கு பிறகு நேற்று (மார்ச் 1) இரவு 9.20 மணிக்கு அவரை இந்திய எல்லைக்கு அழைத்து வந்து பாகிஸ்தான் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில் இருந்து அபிநந்தன், டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இரண்டரை நாட்கள் பாகிஸ்தான் பிடியில் இருந்ததால் அவருக்கு டெல்லியில் ஒரு மருத்துவமனையில் பல்வேறுகட்ட உடல் பரிசோதனை, சிகிச்சை நடைமுறைகள் (கூலிங் டவுன் புராசஸ்) மேற்கொள்ளப்பட்டன.
இந்தச் சூழலில் டெல்லி மருத்துவமனையில் அபிநந்தனை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார். அப்போது பாகிஸ்தான் அதிகாரிகள் நடத்திய விதம் குறித்து அவர் விசாரித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அபிநந்தனின் ரத்த சொந்தங்களும் இன்று அவரை சந்தித்து பேசினர். மேலும் சில மருத்துவ நடைமுறைகளுக்கு பிறகே அபிநந்தன் பணிக்கு அனுப்பப்படுவார் என தெரிகிறது.