Dr Fariha Bugti, Pakistan Foreign Official was With Abhinandan at wagah border: விமானப்படை விங் கமாண்டர் விடுவிக்கப்பட்டு இந்திய எல்லையைத் தொட்டபோது, கோடிக்கணக்கான கண்கள் ஆர்வம் பொங்க அவரை தொலைக்காட்சிகளில் மொய்த்தன. அதே வேளையில் அவரோடு வந்த பெண்மணி, அபிநந்தனின் குடும்ப உறுப்பினரா? என்கிற ரீதியில் சமூக வலைதளங்களில் விவாதங்கள் கிளம்பிவிட்டன. உண்மை என்ன?
உண்மையில் அந்தப் பெண்மணி, அபிநந்தனின் குடும்ப உறுப்பினர் அல்ல. அவரது பெயர், ஃபரிகா புக்தி. பாகிஸ்தானின் எஃப்.எஸ்.பி அதிகாரி அவர்! எஃப்.எஸ்.பி. என்பது இந்தியாவின் ஐ.எஃப்.எஸ் (இந்தியன் ஃபாரின் சர்வீஸ்)-க்கு இணையாது.
பாகிஸ்தான் வெளியுறவு செயலகத்தில் மூத்த அதிகாரியாக இருக்கிறார் ஃபரிகா புக்தி. பாகிஸ்தான் வெளியுறவு செயலகத்தில் இந்திய விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பு இவருடையது. இவர்தான் நேற்று ( மார்ச் 1) இரவு 9.20 மணிக்கு வாகா- அட்டாரி எல்லையில் அபிநந்தன் கால் வைத்தபோது உடன் வந்து ஒப்படைத்தார்.
இந்திய உளவாளியாக குற்றம்சாட்டப்பட்டு, பாகிஸ்தான் பிடியில் வைத்திருக்கும் குல்பூஷன் ஜாதவ் விவகாரத்தை கையாளுபவரும் இதே புக்திதான். கடந்த ஆண்டு இஸ்லாமாபாத்தில் ஜாதவை அவரது தாயும், மனைவியும் சந்தித்தபோது உடன் இருந்தவரும் இவரே!
எனினும் அபிநந்தனின் வரவுக்காக தவித்துக் கிடந்த கண்களில், புக்தியின் தோற்றமும் அழுத்தமாக பற்றிக்கொண்டது.