ஏசி ரயில் பெட்டிகளில் இனி போர்வை கிடையாது: உஷார் ரயில்வே

ஒரு போர்வை சுமார் 48 மாதங்கள் சேவையில் பயன்படுத்தப்படும், மேலும் ஒரு மாதத்திற்கு ஒரு முறை துவைக்கப்படும்.

By: Updated: August 31, 2020, 03:09:34 PM

Avishek G Dastidar

இந்திய ரயில்வேயின் கீழ் ஓடும் ரயில்களின் ஏ.சி. பெட்டிகளில் இனி போர்வைகள், மெத்தைகள், கைக்குட்டைகள் மற்றும் துண்டுகள் ஆகியவை தராது என்று தெரியவந்துள்ளது, கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகும்.  முறையான முடிவு இன்னும் எடுக்கப்படாத நிலையில், இந்த வார தொடக்கத்தில் ரயில்வே வாரியத்தின் உயர்மட்ட மற்றும் மண்டல மற்றும் பிரதேச அதிகாரிகளுக்கு இடையிலான உயர்மட்ட காணொளி ஆலோசனை கூட்டத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட மூன்று உயர் அதிகாரிகள் இதை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு உறுதிப்படுத்தினர். “நாங்கள் அந்த திசையில் நகர்கிறோம்” என்று ரயில்வே அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.  இந்தியா முழுவதும் பில்ட்-ஆபரேட்-ஓன்-டிரான்ஸ்ஃபர் (Build-Operate-Own-Transfer) மாடலின் கீழ் இந்த துணிகளை துவைக்க அமைக்கப்பட்ட இயந்திரமயமாக்கப்பட்ட மெகா லாண்டரிகளை என்ன செய்வது என்று தீர்மானிக்க ஒரு குழு அமைக்கப்பட்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒவ்வொரு லினென் செட்டையும் துவைக்க ரயில்வேக்கு ரூ .40-50 செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மதிப்பீடுகளின் படி, தற்போது சுமார் 18 லட்சம் லினென் செட் புழக்கத்தில் உள்ளது. ஒரு போர்வை சுமார் 48 மாதங்கள் சேவையில் பயன்படுத்தப்படும், மேலும் ஒரு மாதத்திற்கு ஒரு முறை துவைக்கப்படும். தற்போது புதிய லினென் பொருட்கள் எதுவும் வாங்கப்படவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க 

சம்பந்தப்பட்ட செலவைத் விட, கைத்தறி செட்டுகளில், குறிப்பாக போர்வைகள் மற்றும் ஷீட்கள், பயணிகளின் புகார்களுக்கும், பாராளுமன்ற கேள்விகளுக்கும் ஆளாவது வழக்கமான ஒன்றாகும்.  மேலும், கடந்த சில மாதங்களில், சுமார் 20 ரயில்வே பிரிவுகள் தனியார் விற்பனையாளர்களுக்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய போர்வைகள், தலையணைகள் மற்றும் தாள்களை நிலையங்களில் மலிவான விலையில் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தங்களை வழங்கியுள்ளன.

உதாரணமாக, கிழக்கு மத்திய ரயில்வேயின் தனபூர் பிரிவில் இதுபோன்ற ஐந்து விற்பனையாளர்கள் உள்ளனர், அவர்கள் ஒன்றாக ரயில்வேக்கு ஆண்டுக்கு ரூ .30 லட்சம் செலுத்துகிறார்கள். இதுபோன்ற 50 விற்பனையாளர்கள் இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களில் கடை அமைத்துள்ளனர்.

தொடர்ச்சியான செலவுகளுக்குப் பதிலாக, இது கைத்தறி நிர்வாகத்தில் கட்டணமில்லாத வருவாயைப் பெறுவதற்கான வாய்ப்பாக மாற்றுகிறது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஏசி பெட்டிகளில் நவீன வெப்பநிலை கட்டுப்பாட்டு அமைப்புகள் இருக்கும் பட்சத்தில், போர்வைகளின் தேவையை நீக்க முடியும் என்று ஒரு அதிகாரி கூறினார்.

ரயில்வே துறை செய்தி தொடர்பாளர் இது குறித்து பேசிய போது, இதுவரை முடிவு எதும் எடுக்கவில்லை. “தற்போது, கொரோனா பரவலின் காரணமாக யாருக்கும் லினென் செட்கள் வழங்குவதில்லை. நிலைமை சரியான பிறகு, அனைத்து முடிவுகள் குறித்தும் மறுபரிசீலனை செய்யப்படும்” என்றும் அவர் கூறினார்.

தற்போது ரயில்வே சமைத்த உணவை ரயில்களில் பரிமாறவில்லை, அதற்கு பதிலாக பேக் செய்யப்பட்ட மற்றும் சாப்பிட தயாராக உள்ள உணவு பொருட்களை வழங்க்குகிறது. விரைவில் ரயில்கள் மீண்டும் தொடங்கிய பின்னரும் இந்த நடைமுறை “சிறிது காலம்” இருக்கக்கூடும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. சில ரயில்வே பிரிவுகள் தொகுக்கப்பட்ட உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்களுடன் நீண்டகால ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Ac train passengers may not get pillows sheets towels even after pandemic is over

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X