Advertisment

'தற்செயலான முதல்வர்' ஜெய்ராம் தாக்கூர்: ஹிமாச்சலில் புதிய வரலாறு படைக்குமா பா.ஜ.க?

ஹிமாச்சலப் பிரதேச தேர்தல் கருத்துக் கணிப்புகளின்படி ஆளும் பா.ஜக மற்றம் பிரதான எதிர்க்கட்ச காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

author-image
WebDesk
Dec 06, 2022 11:03 IST
New Update
'தற்செயலான முதல்வர்' ஜெய்ராம் தாக்கூர்: ஹிமாச்சலில் புதிய வரலாறு படைக்குமா பா.ஜ.க?

ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 68 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நாளை மறு நாள் டிசம்பர் 8-ம் தேதி

எண்ணப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை வெளியான பெரும்பாலான கருத்துக் கணிப்புகளின்படி, ஹிமாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும்,

அதன் மூலம் மாநிலத்தின் மாற்று அரசாங்கம் என்ற போக்கை உடைக்கும் எனக் கூறப்படுகிறது.

Advertisment

நான்கு கருத்துக் கணிப்புகள் முடிவுகளின்படி பா.ஜ.க 32-40 இடங்களை பெறும் எனக் கூறியுள்ளது. ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு படி காங்கிரஸ் 30-40 இடங்களுடன் போட்டியில் இருக்கும் எனக் கூறியுள்ளது.

ஹிமாச்சலப் பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில், பா.ஜ.கவின் வளர்ச்சியை வலியுறுத்தி, முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் நூற்றுக்கணக்கான கோடி மதிப்பில் திட்டங்களை அறிவித்தார். மத்தியிலும் மாநிலத்திலும் என்ற பாஜகவின் "இரட்டை இயந்திர" அரசாங்கம் குறித்து பேசினார்.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள், பிரதமர் நரேந்திர மோடியை தனது பிரச்சாரத்தின் முகமாக பாஜக முன்னிறுத்துவது பலன் அளித்திருக்கலாம் என சுட்டிக்காட்டுகிறது. சாலை ஓரங்களில் வைக்கப்பட்ட பேனர்களில் பிரதமரின் முகம் மட்டுமே தெரியும் வகையில் அச்சிடப்பட்டிருந்தது. முதல்வர் தாக்கூரின் படங்கள் கூட அதில் காணப்படவில்லை.

publive-image

தேர்தலுக்கு அறிவிக்கப்படுவதற்கு சில நாட்கள் முன் பிரதமர் மோடி, ஹிமாச்சலுக்கு பல முறை சென்று உனா வந்தே பாரத் மற்றும் பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை போன்ற திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது மாநிலத்துடனான தனது தனிப்பட்ட தொடர்பைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசினார். ஹிமாச்சலை தனது "இரண்டாவது வீடு" என்று குறிப்பிட்டார்.

இருப்பினும் பாஜகவில் உட்கட்சி பூசல் நிலவியது. பாஜக அதிருப்தியாளர்கள் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சுயேச்சையாகப் போட்டியிட்டனர். இதை எதிர்கொள்ள கட்சி மூத்த தலைவர்களை களமிறக்கியது, இது பிரச்சாரத்தை பாதிக்காதபடி கையாண்டது. இமாச்சலத்தைச் சேர்ந்த கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலத்திற்கு பலமுறை பயணம் செய்தனர். உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், 5 நாட்கள் 16க்கும் மேற்பட்ட பேரணிகளை நடத்தினார்.

பா.ஜ.க அதிருப்தியாளர்களால் பாதிப்பு ஏற்பட்டாலும், அதன் தாக்கம் பிரச்சாரத்தை பாதிக்காதபடி கையாண்டது. காங்கிரஸ் பொறுத்தவரை ஹிமாச்சலில் நட்சத்திர பேச்சாளர்களை பெரிதாக பயன்படுத்தவில்லை. கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மட்டுமே தேசியத் தலைவராக இருந்து பல தொகுதிகளில் பிரச்சாரம் செய்தார். இது காங்கிரஸுக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் மூத்த தலைவரும், 6 முறை முதல்வராகவும் இருந்த வீரபத்ர சிங்கின் மறைவுக்குப் பிறகு, முதல்வர் பதவிக்கு பல பேர் ஆசைப்படுகின்றனர் என கட்சியே ஒப்புக் கொண்டுள்ளது.

இருப்பினும் தனிப்பட்ட லட்சியங்கள் இறுதியில் கட்சிக்கு தேர்தலில் பயனளிக்கும் என்று நம்புகிறது.

காங்கிரஸ் தனது பழைய ஓய்வூதியத் திட்டத்தை பிரச்சாரத்தில் முக்கியமாக பேசியது. தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. இதனால் அரசு ஊழியர்களை கவர முடியும் என கூறப்படுகிறது.

பதிலுக்கு பா.ஜ.க தேசியவாதம், பொது சிவில் சட்டத்தை பிரச்சாரம் செய்தது. காங்கிரஸை மூழ்கிய கட்சி, செயல்படாத அரசாங்கம், வாரிசு அரசியல் என சாடியது.

1980களில் இருந்து, ஹிமாச்சலில் எந்த ஆளும் கட்சியாலும் அடுத்தடுத்து ஆட்சி அமைக்க முடியவில்லை. ஜெய்ராம் தாக்கூர் "தற்செயலான முதல்வர்" என்று கருதப்பட்டார். அவர் கட்சியை மாநிலத்தில் தொடர்ந்து இரண்டாவது வெற்றிக்கு வழிவகுக்கலாம் எனக் கருத்துக் கணிப்புகள் கூறுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment