scorecardresearch

மோர்பி சம்பவம்.. கடவுளின் செயலா? மோசடியா? பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சிகள் கேள்வி

கொல்கத்தாவில் 2016இல் பாலம் இடிந்து விழுந்த போது பிரதமர் நரேந்திர மோடி, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை குற்றஞ்சாட்டியிருந்தார்.

மோர்பி சம்பவம்.. கடவுளின் செயலா? மோசடியா? பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சிகள் கேள்வி
மோர்பியில் மீட்புப் பணிகள்

குஜராத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்.30) மோர்பி பாலம் இடிந்து விழுந்தது.
இதில், எதிர்க்கட்சிகள் பாஜக அரசாங்கத்தை “அலட்சியம்” என்று குற்றம் சாட்டி, இது “கடவுளின் செயலா” அல்லது “மோசடி செயலா” என்று கேள்வியெழுப்பியுள்ளனர்.

முன்னதாக, மார்ச் 31, 2016 அன்று கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து விழுந்து பலர் கொல்லப்பட்டபோது மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசாங்கத்திற்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடியின் தாக்குதல் தொடுத்திருந்தார்.

இதனை நினைவு கூர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஆகியோர் அனைத்து கட்சி தொண்டர்களையும் “எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர்.

மேலும், சிவசேனா உத்தவ் அணியை சேர்ந்த ஆதித்ய தாக்கரே மற்றும் காங்கிரஸ். இந்தச் சம்பவத்திற்கான காரணம் குறித்து “நீதித்துறை விசாரணை” கோரியுள்ளது.

இந்த நிலையில், பாஜக அரசைத் தாக்கி, தேர்தல் பிரச்சாரத்திற்காக குஜராத் வந்துள்ள மாநிலங்களவை எம்பியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான திக்விஜய சிங், பாலம் இடிந்து விழுந்தது பற்றிய ட்விட்டர் பதிவைப் பகிர்ந்துள்ளார்.

அதில்,“ பாஜக மோடி- ஷாவின் சில எடுத்துக்காட்டுகள் இங்கே உள்ளன. ஆட்சியின் “மோசடி செயல்”… இவை அனைத்தும் கொல்கத்தா பாலம் இடிந்து விழுந்ததில் மோடி ஜி விளக்கியது போல் “பணம்” ஆதாயத்திற்காக கட்டுமானத்தின் தரம் சமரசம் செய்யப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு ட்வீட்டில் ட்வீட்டில், “நிச்சயமாக மோடி ஜி குஜராத் முதல்வராக அவர் அறிந்திருக்க வேண்டும், அவர் இப்போது பாஜக ஆளும் மாநிலங்களிலும், இந்தியா முழுவதும் ஒப்பந்தங்களை எடுத்துக்கொண்டிருக்கும் விருப்பமான சிவில் ஒப்பந்தக்காரர்களின் கூட்டத்தை உருவாக்கினார்” எனத் தெரிவித்துள்ளார்.

இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் பி வி இந்தியில் ட்வீட் செய்துள்ளார். அதில், குஜராத் அரசின் மோசடிச் சட்டத்தால், 141க்கும் மேற்பட்ட உயிர்கள் ஆற்றில் மூழ்கியுள்ளன. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். டஜன் கணக்கானவர்களைக் காணவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கௌரவ், “மோர்பியில் கேபிள் பாலம் சீரமைக்கப்பட்ட ஒரு வாரத்தில் எப்படி, ஏன் இடிந்தது? யாரோ ஒருவரின் அலட்சியத்தாலும், அரசாங்கத்தில் தலைவிரித்தாடும் ஊழலுமே இதற்கு காரணம்” எனத் தெரிவித்துள்ளார்.

சிவசேனா எம்.பி., பிரியங்கா சதுர்வேதி ட்வீட்டில், மேற்கு வங்கத்தில் ஒரு பாலம் இடிந்து விழுந்தபோது பிரதமர் கூறிய கடவுளின் செயல் மற்றும் மோசடி பேச்சு எனக்கு நினைவூட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், “”

குஜராத்தில் மோர்பி தொங்கு பாலத்தில் இறந்தவர்களுக்கு நினைவாக பாரத் ஜோடோ யாத்ரிகள் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தும் படங்களை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தகவல் தொடர்பு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் பகிர்ந்துள்ளார்.
குஜராத்தின் மோர்பி நகரில் மச்சு ஆற்றில் உள்ள தொங்கு பாலம் ஞாயிற்றுக்கிழமை மாலை இடிந்து விழுந்ததில் 134 பேர் உயிரிழந்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Act of god or act of fraud oppn attacks pm modi over morbi

Best of Express