நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு 50,000க்கும் அதிகமாக கண்டறியப்பட்டு வரும் நிலையில், 650க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 90% தொற்று பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது.
ஜூன் 12 முதல் ஜூன் 19 வரை 70 மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் 27 மாவட்டங்களில் 100க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு இருந்தது. 18 மாவட்டங்களில் ஒற்றை இலக்க எண்களில் பாதிப்பு பதிவானது.
இந்த 70 மாவட்டங்களில் 23 மாவட்டங்கள் மேற்கு வங்கத்தில் உள்ளன. கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகம் உள்ள மாநிலமாக மேற்கு வங்கம் உள்ளது. கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 20 நாட்களில் 1.32லட்சத்திலிருந்து 15,000 ஆக குறைந்துள்ளது. ஆனால் அதற்கு பிறகு பாதிப்பு எகிற தொடங்கியது. ஜூன் 19 ஆம் தேதி 23,000 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.
மேற்கு வங்கத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பது காரணமில்லை. ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 3000க்கும் குறைவாக பதிவாகிறது. ஆனால் கடந்த ஒரு வாரத்தில் தொற்றிலிருந்து குணமடைந்து வருபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. உதாரணமாக சனிக்கிழமை, மாநிலத்தில் 2,486 புதிய கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. ஆனால் 2,100 பேர் மட்டுமே தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
கடந்த ஒரு வாரத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள மாநிலங்கள் மணிப்பூர் மற்றும் மிசோரம். ஆனால் இந்த இரண்டு மாநிலங்களிலும் இந்த எண்ணிக்கை 1000த்திற்குள் உள்ளது.
மகாராஷ்ட்ராவில் உள்ள மும்பை, பால்கர், புல்தானா, சாங்லி, அவுரங்காபாத், பர்பானி ஆகிய 6 மாவட்டங்களில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்தில் அதிகரித்துள்ளது. மும்பையில் தற்போது 21,000 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ள நிலையில், கடந்த ஒரு வாரத்தில் 777 அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில், கொல்கத்தா, கிழக்கு மெடினிபூர் மற்றும் வடக்கு 24 பரக்னாக்களில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை மிகப்பெரிய உயர்வை பதிவு செய்துள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil