Shaju Philip
activist Rehana Fathima video : கேரளாவில் பெண் சமூக செயற்பட்டாளர் ரெஹானா பாத்திமா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரைநிர்வாண கோலத்தில் தனது உடம்பில் பிள்ளைகளை வைத்து பெயிண்டிங் செய்த வீடியோ வெளியானதே இதற்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.
33 வயதாகும் ரெஹானா பாத்திமா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவ்வப்போது சில சர்ச்சையான கருத்துக்களை பதிவு செய்வார். இதனால் அவர் குறித்து செய்திகள் அடிக்கடி வெளியாகும். சமீபத்தில் பெண்கள் ஆடை குறித்து அவர் பதிவிட்டிருந்த கருத்தும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதே போல், சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்பு, கோயிலுக்குள் செல்ல முற்பட்ட பெண்களில் ரெஹானாவும் ஒருவர். அப்போது இவ்ர் குறித்த பல சர்ச்சையான செய்திகள் இணையத்தில் வெளியாகி இருந்தன.
இந்நிலையில், தற்போது ரெஹானா பாத்திமா மீது கேரளா பத்தனம்திட்டா மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அண்மையில் ரெஹானா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ரெஹானா அரைநிர்வாண நிலையில் படுத்திருக்க அவர் மீது அவரின் 2 குழந்தைகள் ஓவியம் வரைவது போல் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த வீடியோவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு குரல்கள் கிளம்பி இருந்தன.
இதனையடுத்து, குழந்தைகளை தவறாக பயன்படுத்தியதற்காக ரெஹானா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் ஏ வி அருண் பிரகாஷ் அளித்த புகாரைத் தொடர்ந்து ரெஹானா மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் நலவாரிய மாநில ஆணைய உறுப்பினர் கே.நசீர், போக்ஸோ சட்டத்தில் ரெஹானா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்..
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil