Actor Prakash Raj Contests Lok Sabha Elections 2019 : நடிகர் பிரகாஷ் ராஜ் கடந்த ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்ட சபை தேர்தல் காலம் தொட்டே, மக்களின் குரலாக கர்நாடகாவில் ஓங்கி ஒலித்தார். மக்களுக்கு ஆதரவாகவும், மக்களுக்கு எதிராக செயல்படும் அரசுக்கு எதிராகவும் தன்னுடைய குரலையும் அரசியல் ஞானத்தையும் உலகிற்கு உரைத்தார் பிரகாஷ் ராஜ்.
சுயேட்சையாக போட்டியிடும் பிரகாஷ் ராஜ்
ஜெஸ்ட் அஸ்கிங் (just asking ) என்ற செயல்பாட்டின் கீழ், அரசியல்வாதிகளின் அரசுகளின் செயல்களை ஏன் என்று கேட்க வேண்டும் என்ற விழிப்புணர்வை உருவாக்கியவர். இந்த வருடம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதைத் தொடர்ந்து, சுயேட்சை வேட்பாளராக தேர்தல் களம் காணப் போகிறார் பிரகாஷ்ராஜ்.
எந்த தொகுதியில் நிற்கப் போகிறார் என்பது தொடர்பாக தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று தன்னுடைய ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருக்கிறார். ஊடகவியலாளர் கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டதிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று போராடியவர் பிரகாஷ் ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : நான் எப்போது வேண்டுமானாலும் கொலை செய்யப்படலாம் : பிரகாஷ் ராஜ் பகீர் பேட்டி!