கணவருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார் நமீதா

சினிமா துறையில் கந்துவட்டி பிரச்சனை நிலவுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, திருமண வேலைகளில் இருந்ததனால் ஏதும் தெரியாது என கூறினார்.

சினிமா துறையில் கந்துவட்டி பிரச்சனை நிலவுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, திருமண வேலைகளில் இருந்ததனால் ஏதும் தெரியாது என கூறினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
veerendara chowdary, actress namitha, actress namitha marriage,

நடிகை நமீதா தன் கணவர் வீரேந்திர சௌத்ரியுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

Advertisment

நடிகை நமீதா தன் காதலர் வீரேந்திர சௌத்ரியை கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் செய்தார். இவர்களுடைய திருமணம் திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கோவிலில் நடைபெற்றது. இதில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

இந்நிலையில், கணவர் வீரேந்திர சௌத்ரியுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நமீதா சாமி தரிசனம் செய்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய நமீதா, திருமணம் நடைபெற்றுள்ள நிலையில், சாமியின் ஆசீர்வாதம் வேண்டி வந்ததாக தெரிவித்தார். மேலும், சினிமா துறையில் கந்துவட்டி பிரச்சனை நிலவுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, திருமண வேலைகளில் இருந்ததனால், அப்பிரச்சனை குறித்து தனக்கு ஏதும் தெரியாது என கூறினார்.

Namitha

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: