ரஜினி டயலாக்கை பிசிறு தட்டாமல் பேசிய ரோஜா; குலுங்கி குலுங்கி சிரித்த ஜெகன் மோகன்

ரஜினிகாந்தின் ஜெயிலர் பட டயலாக்கை கூறி சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாணை விமர்சித்த அமைச்சர் ரோஜா; குலுங்கி குலுங்கி சிரித்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்

ரஜினிகாந்தின் ஜெயிலர் பட டயலாக்கை கூறி சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாணை விமர்சித்த அமைச்சர் ரோஜா; குலுங்கி குலுங்கி சிரித்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Roja and Jagan Mohan

ரஜினிகாந்தின் ஜெயிலர் பட டயலாக்கை கூறி சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாணை விமர்சித்த அமைச்சர் ரோஜா

ஜெயிலர் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய டயலாக்கை அப்படியே பேசி பவன் கல்யாணை விமர்சித்து, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சிரிக்க வைத்தார் அமைச்சர் ரோஜா.

Advertisment

ஆந்திர மாநிலத்தில் ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் அமைச்சரவையில் நடிகை ரோஜா அமைச்சராக உள்ளார்.

இதையும் படியுங்கள்: நடிகை விஜயலட்சுமி சீமான் மீது புகார்; ‘நீ முதல்ல வாய மூடுடா…’ ஊடகவியலாளரிடம் ஆவேசம்!

இந்தநிலையில், ஆந்திராவிற்கு வரும் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரவுள்ளது. இதனால் அங்கு தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து உள்ளது. ஆளும் ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி மீது எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜனசேனா கட்சி தலைவரும் நடிகரும் பவன் கல்யாண் இருவரும் பல்வேறு விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.

Advertisment
Advertisements

இதற்கு பதிலளிக்கும் விதமாக ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா சித்தூர் பொதுக்கூட்டத்தில் பேசினார். சித்தூர் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ரோஜா, ஜெயிலர் திரைப்பட இசைவெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய பழமொழியை பிசிறு தட்டாமல் அப்படியே பேசினார்.

அப்போது ரோஜா பேசுகையில், "நடிகர் பவன் கல்யாண், லோகேஷ் (ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன்) ஒவ்வொரு ஊராக போய் ஜெகன் மோகன் ரெட்டியையும் அவரது ஆட்சியையும் விமர்சித்து வருகிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த மாதம் தான் ஒரு படம் ரிலீஸ் ஆகி உள்ளது. ரஜினிகாந்த் படம் ஜெயிலர். அந்த படத்தில் ஒரு டயலாக் வரும். அதில் ரஜினி இப்படி பேசுவார். ’குரைக்காத நாயும் இல்லை.. குறை சொல்லாத வாயும் இல்லை.. இது இரண்டும் இல்லாட்டி ஊரும் இல்லை.. புரியுதா ராஜா.. அர்த்தம்மைந்தா ராஜா’" என்று பவன் கல்யாணை விமர்சித்து நடிகை ரோஜா பேசினார். இதனைக்கேட்டு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி விழுந்து விழுந்து சிரித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ரோஜா, ஒவ்வொரு ஊராக போய், லோகேஷ், பவன் கல்யாண் சந்திரபாபு நாயுடு ஆகியோர் என்ன தான் பொய் பேசினாலும், ஆந்திர மக்களுக்கு நிறைய நல்ல விஷயங்களை செய்துள்ள ஜெகன் அண்ணா (ஜெகன் மோகன் ரெட்டி) 2024 ஆம் ஆண்டு மீண்டும் ஆந்திர பிரதேசத்தின் முதல்வராக வருவார் என்று பேசினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil

Jagan Mohan Reddy Roja Andhra Pradesh India

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: