முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, அடங்க மறு, ஆடு புலி உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ஏராளமான திரைப்படங்களிலும் நடித்தவர் கேரளாவைச் சேர்ந்த ஷம்னா காசிம் பூர்ணா.
இவரிடமிருந்து பணம் பறித்ததாகக் கூறப்படும் விசாரணையில், தங்கக் கடத்தல் மோசடியில், கேரளாவின் திரைப்பட பிரமுகர்கள் மற்றும் சினிமா மாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
நடிகை ஷம்னா காசிம் உள்ளிட்ட சில மாடல் பெண்களை மிரட்டி பணம் பறித்தல் தொடர்பான வழக்கில் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹேர் ஸ்டைலிஸ்ட் ஹாரிஸ் என்பவரை கொச்சி நகர காவல்துறை நேற்று கைது செய்தது.
இந்த வழக்கில் கடந்த புதன்கிழமை முதல், ஷம்னா பூர்ணாவிடம் மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துபாயிலும், கோழிக்கோட்டிலும் நகை கடை வைத்திருபப்தாக கூறி, டிக்டாக்கில் நெருங்கி பழகிய ஒருவர் பூர்ணாவிடம் ஒரு லட்சம் கேட்டு நிர்பந்தித்துள்ளர். இதனால், சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, இதே கும்பல் தங்களையும் கடத்தி பணம் பறித்ததாக மாடலிங் செய்யும் 8 பெண்கள் காவல் துறையிடம் புகார் அளித்திருந்தனர். இதில், சில பெண்களை தங்கக் கடத்தலில் ஈடுபடுத்தியதாக தெரியவந்துள்ளது.
கொச்சி நகர போலீஸ் கமிஷனர் விஜய் சகாரே ஊடகங்களுக்கு பேட்டியளித்தபோது, கும்பலைச் சேர்ந்த முஹம்மது ஷரீஃப் மற்றும் ரபீக் ஆகியோர் ஹேர் ஸ்டைலிஸ்ட் ஹாரிஸ் மூலம் ஷம்னா காசிம் பூர்ணாவை தொடர்பு கொண்டுள்ளனர். ஹேர் ஸ்டைலிஸ்ட் ஹாரிஸுக்கு சினிமா வட்டாரங்களில் சிலருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர். பாதிக்கப்பட்ட பல பெண்கள் புகாரளிக்கு முன் வருகிறார்கள். எனவே, பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாகும் ," என்று தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சிலருடன் தொடர்பில் இருந்ததாக பிரபல காமெடி நடிகர் தர்மஜன் போல்காட்டியை திங்கள்கிழமை போலீசார் விசாரனைக்கு அழைத்தது . பின்பு, ஊடகளுக்களிடம் பேசிய தர்மஜன், தன்னிடம் இருந்து தான் ஹாரிஸ் ஷம்னா காசிம் பூர்ணாவின் தொலைபேசி எண்களை பெற்றுக் கொண்டதாக தெரிவித்தார். இருப்பினும், உள்நோக்கம் தெரியாததால் தான் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் கூறினார்.
இந்த கும்பல் திரைப்பட பிரபலங்களையும், கடத்தப்பட்ட மாடல் பெண்களையும் தங்கக் கடத்தலில் பயன்படுத்தினர் என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. தங்கக் கடத்திலில் ஈடுபட்டால் பெரும் ஊதியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியுடன் பெண்களை அவர்கள் கவர்ந்ததாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், கேரளாவில் சினிமா பிரபலங்களைப் பயன்படுத்தி தங்கக் கடத்தல் சம்பவம் பரவலாக நடைபெறுவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil