ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசால் 'இன்வெஸ்ட் ராஜஸ்தான்' அவுட்ரீச் திட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. அதன்படி, இந்த திட்டத்தின் கீழ் கவுதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் மற்றும் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ஆகியவை மிகப் பெரிய முதலீட்டை செய்ய இருப்பதாக "தி இந்தியன் எக்ஸ்பிரஸ்" இதழ் தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆர்டிஐ விண்ணப்பத்தைத் தொடர்ந்து அம்மாநிலத்தின் முதலீட்டு ஊக்குவிப்பு பணியகம் (BoIP) வழங்கிய தரவுகளின்படி, இரண்டு கார்ப்பரேட் நிறுவனங்களும் டிசம்பர் 2021 முதல் மார்ச் 2022 வரை லெட்டர்ஸ் ஆஃப் இன்டென்ட் (LoIs) மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoUs) ரூ.1.68 லட்சம் கோடிக்கு மேல் உறுதியளித்துள்ளன. இது அம்மாநிலத்தில் முதலீடு செய்யப்பட இருக்கும் ரூ.9,40,453 கோடியில் கிட்டத்தட்ட 18 சதவீதம் ஆகும். இந்தக் காலகட்டத்தில் முதலீட்டு உறுதிமொழிகளின் மொத்த மதிப்பு ரூ.1,000 கோடிக்கு மேல் இருக்கிறது.
முன்னதாக, ராஜஸ்தானை ஆளும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அதானி மற்றும் அம்பானியின் நிறுவங்களுக்கு மத்திய பாஜக அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால் அந்த நிறுவங்களை குரோனி முதலாளித்துவம் என்று குற்றம் சாட்டியிருந்தார். அதானி மற்றும் அம்பானியை இந்தியப் பொருளாதாரத்தில் "டபுள் ஏ வெரியண்ட்" என்றும் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு முன்பும் மத்தியில் பாஜக தலைமையிலான அரசு மீது இதேபோன்ற கிண்டல் செய்துள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் ஆளும் மாநிலத்திலே அவர் குறிப்பட்ட "டபுள் ஏ வெரியண்ட்" ஆனா அதானி மற்றும் அம்பானியின் நிறுவங்கள் முதலீடு செய்திருக்கின்றன. கிடைக்கப்பட்ட தரவுகளின்படி, டிசம்பர் 2021 மற்றும் மார்ச் 2022 க்கு இடையில் ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் லிமிடெட் (ரூ. 1,00,000 கோடி), அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் (ரூ. 60,000 கோடி), அதானி இன்ஃப்ரா லிமிடெட் (ரூ. 5,000 கோடி) முதலீடு செய்ய உறுதிமொழிகள் அளித்துள்ளன. இதேபோல் டோட்டல் கேஸ் லிமிடெட் (ரூ. 3,000 கோடி) மற்றும் அதானி வில்மர் லிமிடெட் (ரூ. 246.08 கோடி) ஆகிய நிறுவனங்களும் உறுதிமொழி அளித்துள்ளன.
ராஜஸ்தான் அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு பணியகத்தால் பட்டியலிடப்பட்ட 4,016 நிறுவனங்களில் JSW ஃபியூச்சர் எனர்ஜி லிமிடெட் (ரூ. 40,000 கோடி), வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் பவர் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் (ரூ. 40,000 கோடி), இந்துஸ்தான் ஜிங்க் கெய்ர்ன், வேதாந்தா குழுமத்தின் (ரூ. 35,30 கோடி), எனர்ஜி வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் (ரூ. 30,000 கோடி), ஆக்சிஸ் எனர்ஜி (ரூ. 30,000 கோடி), ஈடன்-ரினியூவபிள்ஸ் (ரூ. 20,000 கோடி) மற்றும் டாடா பவர் (ரூ. 15,000 கோடி) ஆகிய நிறுவங்கள் அம்மாநிலத்தில் முதலீடு செய்ய உறுதியளித்துள்ளன.
‘இன்வெஸ்ட் ராஜஸ்தான்’ திட்டத்தை “உள்நாட்டு, தேசிய மற்றும் சர்வதேச முதலீட்டாளர் சந்திப்புகள், தூதரக இணைப்பு திட்டங்கள் மற்றும் மெய்நிகர் கருத்தரங்குகளை உள்ளடக்கிய மாநிலத்தின் செயலில் உள்ள முதலீட்டாளர் அவுட்ரீச் திட்டம் என்று விவரிக்கிறது. திட்டமானது முதலீட்டு முன்மொழிவுகளைக் கோருவதையும், அவற்றை ஒரு பணி முறையில் செயல்படுத்துவதையும், அவற்றை நடைமுறைக்குக் கொண்டு செல்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஊக்குவிப்பு பணியகம் (BoIP) அதன் இணைய பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரியில் ‘இன்வெஸ்ட் ராஜஸ்தான் உச்சி மாநாட்டை’ நடத்த அரசு முதலில் திட்டமிட்டிருந்தது, ஆனால் கோவிட்-19 நிலைமை காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது. உத்தேச உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, முதல்வர் கெலாட் கெளதம் அதானி உட்பட பல தொழிலதிபர்களை சந்தித்திருந்தார். உச்சிமாநாடு இப்போது ஜெய்ப்பூரில் அக்டோபர் 7-8 தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரியில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், ராகுல் காந்தி, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறையின் அழிவு, மூலதனத்தை “ஏஏ” (அம்பானி மற்றும் அதானி) கையில் குவிப்பதாக . சில மாதங்களுக்கு முன்பு 2021 டிசம்பரில், விலைவாசி உயர்வுக்கு எதிராக ஜெய்ப்பூரில் நடந்த பேரணியில் உரையாற்றியபோது அவர், "நல்ல காலம் வந்துவிட்டது. யாருக்கு? 'நாம் இருவர், நம் இருவர்'. விமான நிலையம், துறைமுகம், நிலக்கரிச் சுரங்கம், டெலிபோன், சூப்பர் மார்க்கெட் என்று எங்கு பார்த்தாலும் அதானி ஜி, அம்பானி ஜி என்று இரண்டு பேரைத்தான் பார்க்க முடியும். அவர்களின் தவறல்ல. இலவசமாக ஏதாவது கிடைத்தால் அதை மறுப்பீர்களா?இல்லை, நீங்கள் செய்யமாட்டீர்கள். அது அவர்களின் தவறல்ல;அது பிரதமரின் தவறு" என்று கூறியிருந்தார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.