Advertisment

ஒரு வருடத்திற்கு முன்பே புகார் பற்றி அறிந்த அதானி: வெளியான பரபரப்பு தகவல்

அமெரிக்கா எஃப்.பி.ஐ, அதானியின் உறவினர் சாகர் அதானியின் மின்னணு சாதனங்களை மார்ச் 2023-ல் பறிமுதல் செய்தது.

author-image
WebDesk
New Update
ada

அதானி நிறுவனம் அதிக லாபம் பெறும் நோக்கில்  சோலார் மின் திட்ட ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கி மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்க நீதித்துறை கடந்த 2 நாட்களுக்கு முன் பரபரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. 

Advertisment

இந்நிலையில், மார்ச் 18 அன்று, ப்ளூம்-பெர்க் என்ற செய்தி நிறுவனம் அமெரிக்கா "இந்திய கோடீஸ்வரர் கெளதம் அதானி மற்றும் அவரது குழுவின் லஞ்ச வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துகிறது" என்று செய்தி வெளியிட்டுள்ளது. இதையடுத்து   அதானி எண்டர்பிரைசஸ் இந்திய பங்குச் சந்தைகளில் அந்த அறிக்கை "தவறானது" என்று கூறியது.

ஆனால் ஏறக்குறைய சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு “மார்ச் 17, 2023-ல்,  கௌதம் அதானியின் உறவினர், அதானி கிரீன் எனர்ஜியின் செயல் இயக்குநர் சாகர் அதானி, அமெரிக்காவில் உள்ள  எஃப்.பி.ஐ சிறப்பு அதிகாரிகளால் அணுகப்பட்டார். அவர்கள் சாகர் அதானியின் மின்னணு சாதனங்களை மார்ச் 2023-ல் பறிமுதல் செய்தனர் என்று  நவ.20-ம் தேதி வெளியான குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. 

எஃப்.பி.ஐ சாகர் அதானிக்கு ஒரு பிடிவாரண்ட் வழங்கியது மற்றும் அவருக்கு ஒரு பெரிய ஜூரி சப்போனாவை வழங்கியது. கௌதம் அதானி இல்லையென்றால், அவரது உறவினர் சாகர் அதானிக்கு லஞ்ச விசாரணை பற்றி நிச்சயமாக தெரியும் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் படிக்க:   Adani aware of probe a year ago… told markets news false: Indictment

அடுத்த நாளே, “மார்ச் 18, 2023 அல்லது அடுத்த சில நாட்களில்” கௌதம் அதானி, தேடுதல் வாரண்டின் ஒவ்வொரு பக்கத்தின் புகைப்படங்களையும் மின்னஞ்சல் மூலம் தனக்குத்தானே அனுப்பியதாகவும், அவரது உறவினர் மீது கிராண்ட் ஜூரி சப்போனா அனுப்பியதாகவும் குற்றப்பத்திரிகை கூறுகிறது.

"அமெரிக்க அரசாங்கத்தின் விசாரணையில் உள்ள பொருள் குற்றங்கள் மற்றும் தனிநபர்கள்" சிலவற்றை அறிந்திருந்தும், கௌதம் அதானி மற்றும் சாகர் அதானி ஆகியோர் "அமெரிக்காவிலும் பிற இடங்களிலும் உள்ள நிதி நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களிடமிருந்து லஞ்சத் திட்டத்தை மறைத்துள்ளார். 

அதுமட்டுமல்லாமல்,  அவர்கள் சந்தையில் தவறான தகவல்களை  கூறியதாகவும் கூறப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment