Jay Mazoomdaar
அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட்டின் முக்கிய ஆலோசகர் இப்போது மத்திய அரசின் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவில் (EAC) உறுப்பினராக உள்ளார், இந்தக் குழு முன் அதானி நிறுவனத்தின் ஹைட்ரோ திட்ட முன்மொழிவுகள் அனுமதிக்கு வருகின்றன என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸூக்கு தெரிய வந்துள்ளது. அரசாங்கத்தின் முன் அனுமதி தேவைப்படும் திட்டங்களை EAC விவாதித்து முடிவெடுக்கிறது.
ஆங்கிலத்தில் படிக்க: Adani Green advisor in hydel appraisal committee of Environment Ministry
செப்டம்பர் 27 அன்று, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், நீர்மின்சாரம் மற்றும் நதி பள்ளத்தாக்கு திட்டங்களுக்கான EAC குழுவை மறுசீரமைத்த போது, ஏழு நிறுவன சாரா உறுப்பினர்களில் ஒருவராக ஜனார்தன் சௌத்ரியை பெயரிட்டது.
மறுசீரமைக்கப்பட்ட EAC (hydel) நீர்மின் திட்டத்தின் முதல் கூட்டம் அக்டோபர் 17-18 அன்று நடைபெற்றது. மகாராஷ்டிராவின் சதாராவில் AGEL இன் 1500 மெகாவாட் தரலி பம்பிங் சேமிப்புத் திட்டம் பரிசீலனைக்கு வந்த நாளான அக்டோபர் 17 அன்று ஜனார்தன் சௌத்ரி கூட்டத்தில் கலந்துகொண்டதாக பதிவுகள் காட்டுகின்றன.
முன்மொழியப்பட்ட நீர் கடத்தி அமைப்பு "ஏற்கனவே இருக்கும் காற்றாலைக்குக் கீழே" கடந்து சென்றது மற்றும் நிலத்தடி அல்லது காற்றாலை அஸ்திவாரங்களுக்குக் கீழே கட்டுமானம் இருப்பது கடினம் என்பதை உணர்ந்த பிறகு, திட்டத்தின் தளவமைப்பை மறுபரிசீலனை செய்ய AGEL நிறுவனம் திட்டத்தின் குறிப்பு விதிமுறைகளில் (ToR) திருத்தத்தை நாடியது.
விரிவான ஆலோசனைக்குப் பிறகு, AGELக்கு ஆதரவாக EAC பரிந்துரைத்தது.
சந்திப்பின் அறிக்கைகளில் எந்த மறுப்பும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்பு கொண்டபோது, EAC குழு AEGL நிறுவனத்தின் திட்டத்தை பரிசீலித்தபோது தான் விவாதத்தில் பங்கேற்கவில்லை என்று ஜனார்தன் சௌத்ரி கூறினார். "விவகாரம் வந்தபோது நான் விலகிவிட்டேன்," என்று அவர் கூறினார். அறிக்கைகள் இதைப் பிரதிபலிக்கவில்லை என்று கூறியபோது, "நாங்கள் அறிக்கைகளைத் திருத்துவோம்" என்றும் அவர் கூறினார்.
அதானி நிறுவன திட்டங்களுக்கு EAC குழு அனுமதியின் பச்சை முத்திரையை அளிக்கிறது, உண்மையில், சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986 இன் கீழ் 2006 இல் வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) அறிவிப்பு, சுற்றுச்சூழல் முன் அனுமதி (EC) பெறுவது சில வகை திட்டங்களுக்கு தேவைப்படுகிறது. பத்து EACகள் வெவ்வேறு துறைகளில் இந்த முன்மொழிவுகளை ஆய்வு செய்து அனுமதியை முடிவு செய்கின்றன.
ஜனார்தன் சௌத்ரி மார்ச் 2020 இல் NHPC இன் இயக்குனராக (தொழில்நுட்பம்) ஓய்வு பெற்றார் மற்றும் ஏப்ரல் 2022 முதல் அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் (AGEL) இன் ஆலோசகராக (பம்ப் செய்யப்பட்ட சேமிப்பு ஆலைகள் மற்றும் ஹைட்ரோ) இருந்து வருகிறார்.
EAC உறுப்பினராக அவரது நியமனம், AGEL இன் பம்ப் செய்யப்பட்ட சேமிப்பகத் திட்டங்கள் இந்த EAC அனுமதிக்கு முன் வருவதால், முரண்பாட்டின் கேள்விகளை எழுப்பலாம்.
தற்போது, EAC க்கு முன் உள்ள AGEL திட்டங்களில் பின்வருவன அடங்கும்: 850 மெகாவாட் ரைவாடா; 1800 மெகாவாட் பெடகோட்டா (இரண்டும் ஆந்திரப் பிரதேசம்); 2100 மெகாவாட் பட்கான், 2,450 மெகாவாட் கொய்னா-நிவாகனே, 1500 மெகாவாட் மல்ஷேஜ் காட் போராண்டே மற்றும் 1500 மெகாவாட் தாரலி (அனைத்தும் மகாராஷ்டிரா).
ஆந்திராவில் ரூ.15,740 கோடி முதலீட்டில் 1,200 மெகாவாட் குருகுட்டி, 1,000 மெகாவாட் கரிவலசா, 1,000 மெகாவாட் சித்ராவதி மற்றும் காந்திகோட்டாவில் 1,000 மெகாவாட் பம்ப் செய்யப்பட்ட சேமிப்பகத்தை உருவாக்க அதானி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
யோகேந்திர பால் சிங், அமைச்சகத்தின் விஞ்ஞானி (சுற்றுச்சுழல்) மற்றும் சம்பந்தப்பட்ட EAC இன் உறுப்பினர் செயலர், AEGL திட்டம் குறித்த விவாதத்தில் ஜனார்தன் செளத்ரி கலந்துக் கொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
எவ்வாறாயினும், ஒரு மூத்த அமைச்சக அதிகாரி, மதிப்பீட்டுக் குழுக்களில் "அத்தகைய நியமனங்கள் வாடிக்கையாக மாறுவதால் ஏற்படும் கடுமையான பாதகத்தை" சுட்டிக்காட்ட பல உச்ச நீதிமன்ற உத்தரவுகளை குறிப்பிட்டார்.
"ஒரு உறுப்பினர் தனது முதலாளியின் திட்டங்கள் பரிசீலிக்கப்படும் போது விவாதத்தில் பங்கேற்காதது மட்டும் போதாது. அவரது முதலாளியின் போட்டியாளர்களின் திட்டங்கள் பற்றி அவரது நிலைப்பாடு என்ன? அல்லது நேரடியாக இணைக்கப்பட்ட திட்டங்களில் இருந்து விலகியிருந்தாலும், அத்தகைய உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவை வழங்கும்போது ஆதாயத்திற்கான வாய்ப்பு என்ன? சார்புநிலையை நிலைநிறுத்துவதை விட, அத்தகைய சார்புக்கான சாத்தியக்கூறு முக்கியமானது," என்று அந்த அதிகாரி கூறினார்.
இந்த சாத்தியக்கூறுகள் குறித்து கேட்டதற்கு, ஐ.ஐ.டி ரூர்க்கியின் (IIT-Roorkee) பேராசிரியரும், EAC இன் தலைவருமான GH சக்ரபாணி, “ஒரு திட்ட முன்மொழிபவருக்கு ஆலோசனை சேவைகளை வழங்கியவர்கள், அத்தகைய ஆதரவாளர்களால் முன்மொழியப்பட்ட எந்தவொரு திட்டத்தையும் மதிப்பிடும் செயல்முறையிலிருந்து தங்களைத் தாங்களே விலக்கிக் கொள்வார்கள் என்று எங்கள் நியமன நிபந்தனைகள் கூறுகின்றன. நாங்கள் எங்கள் விதிகளின்படி செல்கிறோம்,” என்று கூறினார்.
ஜனார்தன் சௌத்ரி தனது நிலைப்பாட்டை பாதுகாத்தார். “நான் ஒரு தனியார் நிறுவனத்தில் ஆலோசகராக இருக்கிறேன் என்பதை அமைச்சகம் அறிந்திருக்கிறது. ஆனால் நான் யாருடைய ஊழியரும் அல்ல, மற்றவர்களுக்கும் அறிவுரை கூற முடியும். எனது EAC நியமனம் ஒரு உறுப்பினராக நான் EAC யின் நலன் கருதி எனது கருத்தை தெரிவிப்பேன் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது” என்று அவர் கூறினார்.
EAC (ஹைடல்) இன் மற்ற நிறுவன சாரா உறுப்பினர்கள் உதய்குமார் ஆர் யாரகட்டி, தேசிய தொழில்நுட்பக் கழகம் கர்நாடகாவில் பேராசிரியர்; முகேஷ் சர்மா, ஐ.ஐ.டி-கான்பூரில் பேராசிரியர்; வி தியாகி, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹைட்ராலஜியின் முன்னாள் இயக்குநர்; கார்த்திக் சப்ரே, நர்மதா சமக்ர நியாஸின் தலைமை நிர்வாகி; மற்றும் அஜய் குமால் லால், முன்னாள் இந்திய வனத்துறை அதிகாரி. EAC உறுப்பினர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“