Advertisment

அதானி விவகாரம்: அழுத்தம் கொடுக்கும் எதிர்க்கட்சிகள்; பிரதமர் மௌனம் பற்றி கேள்வி

இந்த விவகாரத்தில் இனி காங்கிரஸ் மோடியிடம் தினமும் மூன்று கேள்விகளைக் கேட்கும் என ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

author-image
WebDesk
New Update
அதானி விவகாரம்: அழுத்தம் கொடுக்கும் எதிர்க்கட்சிகள்; பிரதமர் மௌனம் பற்றி கேள்வி

அதானி குழுமத்திற்கு எதிராக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. இது இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியலிலும் புயலைக் கிளப்பியுள்ளது. பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டையடுத்து அதானி குழுமத்தின் பங்குகள் சரிந்து வருகிறது.

Advertisment

காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்புத் துறை பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ், பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) தலைவர் மாயாவதி ஆகியோர் இது தொடர்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மத்திய அரசைக் கேள்வி எழுப்பியுள்ளனர். அரசாங்கம் "மக்களின் நம்பிக்கையுடன் விளையாடுகிறது" என்று மாயாவதி குற்றஞ்சாட்டினார்.

ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "அதானி மஹாமெகாஸ்கேம் விவகாரத்தில் பிரதமரின் மொளனம் கேள்விகளை எழுப்புகிறது. அதானியுடன் நாங்கள் எப்படி தொடர்பு கொள்கிறோம் என்ற தொடரை தொடங்க வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் உள்ளோம். இன்று முதல் நாங்கள் பிரதமரிடம் 3 கேள்விகளை எழுப்புவோம். முதல் 3 கேள்விகளை முன் வைக்கிறேன். மௌனத்தைக் கலையுங்கள் பிரதமரே" என்று தெரிவித்துள்ளார்.

2016 ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பொருளாதார குற்றவாளிகள், பணமோசடி செய்பவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் எனப் பேசியதை மேற்கோள் காட்டி ரமேஷ் 3 கேள்விகளை முன்வைத்தார்.

கௌதம் அதானியின் சகோதரர் வினோத், பனாமா மற்றும் பண்டோரா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளார். நாடு கடந்து நிறுவனங்கள் நடத்துபவர் என்றும், பங்கு மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றங்சாட்டப்பட்டுள்ளது. ரமேஷ் இதற்கு கேள்வி எழுப்பி உங்கள் விசாரணையின் தரம் மற்றும் நேர்மை என்ன என்று கேட்டார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "உங்கள் அரசியல் எதிரிகளை மிரட்டுவதற்கும், உங்களுக்கு ஒத்துவராத வணிக நிறுவனங்களை தண்டிக்கவும், பல ஆண்டுகளாக, அமலாக்க இயக்குனரகம், மத்திய புலனாய்வுப் பிரிவு, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் போன்ற அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளீர்கள். நண்பர்களின் நிதி நலன்கள் … அதானி குழுமத்திற்கு எதிரான பல ஆண்டுகளாக கடுமையான குற்றச்சாட்டுகளை விசாரிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் ஏகபோகங்களை உருவாக்க அனுமதிக்கப்பட்டுள்ள இந்தியாவின் மிகப்பெரிய வணிகக் குழுக்களில் ஒன்று, தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், இவ்வளவு காலம் தீவிர விசாரணையில் இருந்து தப்பியிருப்பது எப்படி சாத்தியம்? இத்தனை ஆண்டுகளாக ஊழலுக்கு எதிரான பேச்சுக்களில் இருந்து லாபம் ஈட்டிய ஒரு ஆட்சிக்கு அதானி குழுமம் இன்றியமையாததா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

,

ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு மாயாவதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதானி எபிசோட் நாட்டின் பொருளாதாரத்தில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று கூறினார். இந்த விவகாரத்தில் நாட்டு மக்களின் நலனில் அரசாங்கம் நம்பிக்கை கொள்ளாதது துரதிர்ஷ்டவசமானது என்று அவர் கூறினார்.

தொடர்ந்து கூறுகையில், அதானி விவகாரத்தால் இந்தியாவின் இமேஜ் கேள்விக்குறியாகியுள்ளது. எல்லோரும் கவலைப்பட்டாலும் அரசாங்கம் இந்தப் பிரச்சினையை மிகவும் இலகுவாக எடுத்துக் கொள்கிறது. இது சிந்திக்க வேண்டிய விஷயம்" என்றார்.

அரசாங்கம் "மக்களின் நம்பிக்கையுடன் விளையாடுகிறது" என்று குற்றஞ்சாட்டிய உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர், "இந்தியாவின் பொருளாதார உலகம் அவநம்பிக்கை, ஏமாற்றம் மற்றும் மனச்சோர்வடைந்துள்ளது. இது நாட்டின் பொருளாதாரம் மற்றும் பொது வாழ்வில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும். மற்ற பிரச்சனைகளைப் போல் இந்த விஷயத்திலும் அரசாங்கம் நாட்டு மக்களை நம்பிக்கை கொள்ளவில்லை. இது வருத்தமாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Congress Vs Bjp Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment