அதானி குழுமத்தின் விழிஞ்சம் இன்டர்நேஷனல் சீபோர்ட் லிமிடெட் (VISL) கட்டுமானத்தின் விளைவாக கடலோர அரிப்பு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட நிபுணர் குழுவை கேரள அரசு நியமித்துள்ளது.
இப்பகுதியில் மீனவர்களின் போராட்டம் 80வது நாளை எட்டியுள்ள நிலையில் நிபுணர் குழு நியமனம் செய்யப்பட்டு உள்ளது.
முன்னதாக, கட்டுமானப் பணிகளால் கடல் அரிப்பு ஏற்பட்டு வாழ்வாதாரம் மற்றும் குடியிருப்புகள் பறிபோவதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கத்தோலிக்க திருச்சபையின் போராட்டத்தால் கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளன. இந்த நிலையில், அக்டோபர் 6ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில், கட்டுமானப் பகுதியில் கரையோர அரிப்பு ஏதேனும் இருந்தால், அதை நிவர்த்தி செய்வதற்கான குறிப்பிட்ட நடவடிக்கைகளைக் எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
மேலும், அறிக்கையை இறுதி செய்வதற்கு முன், உள்ளூர் மக்களின் பிரதிநிதிகளின் கருத்துக்களைக் கேட்கவும் குழுவுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி, துறைமுகத்தின் இருபுறமும் 20 கிமீ தூரத்திற்கு கடற்கரை மாற்றங்கள் மற்றும் பிற சுற்றுச்சூழல் அளவுருக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, நிபுணர் நிறுவனங்களால் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன.
தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT), புவி அறிவியல் ஆய்வுகளுக்கான தேசிய மையம் (NCESS) மற்றும் L&T இன்ஃப்ரா இன்ஜினியரிங் லிமிடெட். விழிஞ்சத்தில் துறைமுகம் கட்டப்படுவதால் வரவிருக்கும் துறைமுகத்தின் வடக்கே வலியத்துறை மற்றும் சங்குமுகம் போன்ற இடங்களில் கரையோர அரிப்பு ஏற்பட்டதாக மேற்படி நிபுணர் குழுவோ அல்லது கரையோரக் கண்காணிப்புப் பிரிவோ இதுவரை கவனிக்கவில்லை.
ஆனால், விழிஞ்சம் துறைமுகம் அமைக்கப்படுவதால் துறைமுகத்தைச் சுற்றிலும் கரையோர அரிப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து மற்றொரு நிபுணர் குழுவை நியமிக்க அரசு முடிவு செய்தது.
லந்துரையாடலின் போது உள்ளூர் மக்களின் பிரதிநிதிகளால் அமைச்சரவை உபகுழுவின் முன் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
அரசின் இந்த முடிவுக்கு எதிர்வினையாற்றும் போராட்டத்தின் பொது அழைப்பாளரான திருவனந்தபுரம் பேராயர் ஜெனரல் பிரான்சிஸ் யூஜின் ஹெச் பெரையா (Fr Eugine H Pereira) உள்ளார்.
இவர், திட்டத்திற்கு எதிரான போராட்டத்தைத் தொடரப்போவதாகக் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ““எங்கள் பிரதிநிதி குழுவில் இடம்பெறுவார் என்று எங்களுக்கு உறுதியளிக்கப்பட்டது. இப்போது, அதானி குழுமத்தின் அனுசரணையுடன் அவர்களுக்கு சாதகமான அறிக்கையைப் பெற அரசாங்கம் ஒரு குழுவை அமைத்துள்ளது.
நாங்கள் நம்பிக்கைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இத்திட்டத்தால் கடல் அரிப்பினால் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிய, ஆய்வு குழு ஒன்றையும் மீனவர்கள் சமூகம் நியமித்துள்ளது. வரும் நாட்களிலும் எங்கள் போராட்டம் தொடரும்” என்றார்.
கேரள அரசு அமைத்துள்ள குழு புனேவில் உள்ள மத்திய நீர் மற்றும் மின்சக்தி ஆராய்ச்சி நிலையத்தின் முன்னாள் கூடுதல் இயக்குநர் எம் குடேலே தலைமையில் உள்ளது.
இந்தக் குழுவில், கேரள மீன்வளம் மற்றும் கடல்சார் ஆய்வுகள் பல்கலைக்கழகத்தின் VC டாக்டர் ரிஜி ஜான், இந்திய அறிவியல் கழகம்-பெங்களூரு இணை பேராசிரியர் டாக்டர் தேஜல் கனிட்கர் மற்றும் காண்ட்லா போர்ட் டிரஸ்ட் முன்னாள் தலைமை பொறியாளர் டாக்டர் பிகே சந்திரமோகன் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
கேரளாவில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான UDF ஆட்சிதான் ஆகஸ்ட் 2015 இல் அதானி குழுமத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
அப்போது இந்தத் திட்டம் 2019ஆம் ஆண்டு டிசம்பருக்குள் முடிக்கப்படும் எனக் கூறப்பட்டது. அதாவது 1000 நாள்களுக்குள் திட்டம் முடிக்கப்படும் எனக் கூறப்பட்டது.
ஆனால் தொடர் போராட்டங்கள் காரணமாக கட்டுமானங்கள் தாமதமாகின. இது மேலும் தாமதம் ஆகும் எனத் தெரிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.