தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வயலைப் பராமரிப்பதில் தான் அவருடைய அன்றாடப் பணி இருந்தபோதிலும், ஷேக் மீரானுக்கு ஒரு வலுவான குறிக்கோள் இருந்தது. அது அவருடைய 4 குழந்தைகளையும் நன்கு படிக்க வைத்து பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதாகும். பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது குழந்தைகளில் ஒருவர் வானத்தை இலக்காகக் கொண்டு அவரது எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டு சென்று சாத்தித்தார்.
செப்டம்பர் 2 அன்று, 59 வயதான நிகர் ஷாஜி, இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத்துடன் மேடையைப் பகிர்ந்து கொண்டார், சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் திட்டமான ஆதித்யா-எல்.1 விண்கலம் வெற்றிகரமாக ஏவுப்பட்டதாக அறிவித்தார்.
ஷாஜி ஆதித்யா-எல்.1 திட்டத்தின் திட்ட இயக்குநர் ஆவார். பூமியில் இருந்து 1.5 மில்லியன் கி.மீ தொலைவில் விண்கலத்தை நிறுத்தி சூரியனை ஆய்வு செய்யும் திட்டத்தில் நூற்றுக்கணக்கான இஸ்ரோ நபர்களுடன் இணைந்து இந்த திட்டத்தை தலைமை தாக்கி முன்னெடுத்தார்.
நான் இதை எதிர்பார்க்கவில்லை
“முஸ்லீம் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்து படிப்பது வழக்கமில்லாத காலத்தில், எங்கள் தந்தை நாங்கள் அனைவரும் நல்ல கல்வியைப் பெறுவதை உறுதி செய்தார். பெண்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று அவர் உறுதியாக நம்பினார்,” என்று ஷாஜி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
இந்த எண்ணத்தின் பின்னால் அவரின் கல்வி இருந்தது. அவர் கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்று அவர் கூறினார்.
"நான் இஸ்ரோவில் சேருவேன் என்று எதிர்பார்க்கவில்லை. கணிதம் மற்றும் இயற்பியல் மீதான காதல் என்னை இங்கு அழைத்து வந்தது. என் வீட்டில் சொன்னது போது நான் டாக்டராக வேண்டும் என்று நினைத்தேன். அவர்கள் என்னிடம் பொறியாளர் என்றால் வேலைக்காக நகரங்களுக்குச் செல்ல வேண்டும், அதே நேரத்தில் ஒரு மருத்துவர் என்றால் எங்கும் வேலை செய்யலாம் என்று சொன்னார்கள்.
உண்மையில், நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்பதைக் கண்டுபிடிக்க ஒரு வருட இடைவெளி எடுத்தேன். நான் கணிதம் மற்றும் அறிவியலை மிகவும் நேசிப்பதால் பொறியியல் படிப்பில் முன்னேற முடிவு செய்தேன், ”என்று அவர் கூறினார்.
எலக்ட்ரிக்கல் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படித்த அவர், நாளிதழில் இஸ்ரோ வேலை வாய்ப்பு குறித்த தகவலைப் பார்த்து இஸ்ரோவில் சேர முடிவு செய்ததாக அவர் கூறினார். "எனினும் நான் அதை திட்டமிடவில்லை என்றாலும், விண்வெளி பயணங்களில் பணிபுரிவதை நான் விரும்பினேன்," என்று ஷாஜி கூறினார். மேலும் எனக்கு அதிக வேலை இருக்கும் பொழுது என் அம்மா என் வீட்டைப் பார்த்துக் கொள்வார்கள் என்றார்.
ஆதித்யா எல்.1 என்னை மிகவும் உற்சாகப்படுத்திய பணி. இது புதியது மற்றும் சவாலானது. நாங்கள் இதுவரை யாரும் பயணிக்காத பாதையில் பயணிப்போம் என்றார்.
யார் இந்த கல்ஹஸ்தி?
மற்றொரு சாதனைப் பெண்மணியாக இஸ்ரோவின் யு.ஆர் ராவ் செயற்கைக் கோள் மையத்தைச் சேர்ந்த ஷாஜியின் சக பணியாளரான கல்பனா கல்ஹஸ்தி உள்ளார். இவரும் நாட்டின் பெருமைக்குரிய திட்ட பட்டியலில் முக்கிய இடத்தில் இடம்பிடித்துள்ளார்.
47 வயதான கல்ஹஸ்தி, சந்திரயான்-3 திட்டத்தின் இணை திட்ட இயக்குனராக உள்ளார். சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி, நிலவில் சாஃப்ட் லேண்டிங் செய்த 4-வது நாடு என்றும் நிலவின் தென் துருவத்திற்கு மிக அருகில் சென்ற முதல் நாடு என்ற பெருமையும் இந்தியா பெற்றுள்ளது.
ஆகஸ்ட் 23 அன்று மாலை கல்ஹஸ்தியின் தாயார் தனது குடும்பத்துடன் தொலைக்காட்சி முன் உற்சாகமாக அமர்ந்திருந்தார். நாட்டின் பிற பகுதிகளைப் போலவே, அவர் தனது மகள் பல மாதங்களாக பணியாற்றிய வரலாற்று சிறப்புமிக்க சந்திரயான் திட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
கல்ஹஸ்தி கூறுகையில், என் வாழ்க்கையில் என் தாயார் மிகப்பெரிய ஆதரவாக இருந்துள்ளார். அந்த காலத்தில் பெரும்பாலான பெண்கள் வங்கி மற்றும் ஆசிரியர் வேலைக்குச் செல்லும் போது நான் பொறியியலாளராக வேண்டும் என்ற எனது முடிவை ஆதரித்தார்," என்று கூறினார்.
சந்திரயான்-2 தோல்வி: மிகுந்த வலி
அவரைப் பொறுத்தவரையில் பிரபலமான ஸ்ட்ரீம் Software Engineering-ல் விரும்பம் இல்லை. இஸ்ரோவில் பணிபுரிவது அவரது கனவாக இருந்தது. அவர் கோர் இன்ஜினியரிங் மீது ஆர்வமாக இருந்தார். மேலும் இஸ்ரோ பல்வேறு துறைகளைச் சேர்ந்த பொறியாளர்களையும் விஞ்ஞானிகளையும் ஒன்றிணைத்து பொறியியல் அற்புதங்களை செய்தது.
கல்ஹஸ்தி சந்திரயான்-2 திட்டத்திலும் பணிபுரிந்தார். மென்மையான தரையிறங்கும் இலக்கை அடையாத ஏமாற்றத்திலிருந்து அடுத்த பணியின் வெற்றியை உறுதிசெய்யும் தனது பயணத்தை விவரித்த அவர், “நீங்கள் எதையாவது அதிக முயற்சி செய்து, இலக்கை நெருங்கி அடைய முடியாமல் போவது எவ்வளவு கடினமாக இருக்கும். ஏற்றுக்கொள்வது மிகவும் கடினம்… ஆனால் அந்த பணி ஏற்கனவே நிறைய சாதித்துள்ளது. சந்திரயான்-2 அதற்காக உருவாக்கப்பட்ட பல தொழில்நுட்பங்களை நிரூபித்தது - கடினமான பிரேக்கிங் கட்டம் திட்டமிட்டபடியே சென்றது.
சந்திரயான்-2 நிலவில் மோதி தோல்வியடைந்த பிறகு, திட்ட குழுக்கள் உடனடியாக காரணங்களைத் தேடும் வேலையைத் தொடங்கின, Powered descent-ல் கிடைக்கும் தரவுகளை கொண்டு பகுப்பாய்வு செய்தன. தோல்வி பகுப்பாய்வு முடிந்ததும், புதிய அணிகள் அறிவிக்கப்பட்டன.
கல்ஹஸ்தி மற்றும் திட்ட இயக்குநர் பி. வீரமுத்துவேல் ஆகியோர் இணைந்து திட்டத்தின் பல்வேறு குழுக்கனை ஒருங்கிணைக்கும் பொறுப்பை வகித்தனர். ஒரு வலுவான விண்கலத்தை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், தீவிர நிலைமைகளின் கீழ் கூட அது எவ்வாறு செயல்பட்டது என்பதைப் பார்க்க அதை முழுமையாகச் சோதிப்பதற்கும் குழுக்கள் இடைவிடாமல் உழைத்தன என்றார்.
இரவு முழுவதும் வேலை
சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கி செயல்பட்ட பின் இதுவரை இஸ்ரோ சொல்லப்படாத மற்றொரு சோதனையாக சந்திரயான்-3 விக்ரம் லேண்டரை மீண்டும் மேலே எழும்பச் செய்து மற்றொரு இடத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த சோதனை நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு முன்னோடியாக இருக்கும் என்று கூறியது. தற்போது லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை உறக்க நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பணியில் பணிபுரிந்த அனுபவத்தை விவரித்த அவர், அதிக நேரம் பணி செய்வது வழக்கமாகியது என்றார். ஏனெனில், "அனைத்து சோதனைகளும் அதிகாலையில் நடத்தப்பட வேண்டும், இது போர்டு கேமராக்களை சோதிக்க நிலவின் பகல் நேரத்தை பிரதிபலிக்கும். இதன் பொருள் குழுக்கள் அதை அமைப்பதற்கு இரவில் வேலை செய்கின்றன” என்று கல்ஹஸ்தி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.