புதுச்சேரி உப்பளத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் அன்பழகன், “புதுச்சேரியில் போதைப் பொருள்கள் பயன்பாடு கல்லூரி மாணவ- மாணவியர்கள் மத்தியில் அதிகரித்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
இது குறித்து அவர், “புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவ கல்லூரி மாணவர்கள், ஸ்டாம்ப் வடிவிலான போதை பொருட்கள் விற்பனை செய்ததால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் புதுச்சேரிக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் கல்லூரி மாணவர்கள், சுற்றுலா பயணிகளை குறிவைத்து உயர்ரக போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்திய அளவில் உயர்ரக போதை பொருட்கள் விற்பனை செய்யும் கேந்திரமாக புதுச்சேரி மாறி வருகிறது.
புதுச்சேரியில் தற்போது அதிகளவு போதை பொருட்கள் பல்வேறு வழிகளில் விற்கப்பட்டு வருகின்றது. அரசு இதனை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றார்.
இவ்விவகாரத்தில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு நேரடியாக தலையிட்டு புதுச்சேரியில் சோதனை நடத்தவேண்டும் என்ற அவர்,போதை பொருட்களை விற்பனை செய்யும் ரெஸ்டோ பார் உரிமைகளை ரத்தம் செய்ய வேண்டும் என்றும், அதன் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றார்.
புதுச்சேரியில் கொசு உற்பத்தி பெருகி ,நோய் பரவல் அதிகரித்து வருவதால் போர்க்கால அடிப்படையில் குடியிருப்புகள் மற்றும் வாய்க்கால்களில் போர்க்கால அடிப்படையில் கொசு மருந்தினை தெளிக்க வேண்டும் என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“