கடந்த 2020-21 ஆம் ஆண்டில், 7 தேர்தல் அறக்கட்டளைகள் கார்ப்பரேட்டுகள் மற்றும் தனிநபர்களிடமிருந்து மொத்தம் ரூ. 258.4915 கோடியை நன்கொடையாக பெற்றதாகவும், பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு ரூ. 258.4301 கோடியை விநியோகித்ததாகவும் ஜனநாய சீர்திருத்த சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதில் பாஜக மட்டும் ரூ.212.05கோடி அதாவது மொத்த நன்கொடையில் 82.05சதவீதம் நன்கொடை பெற்றுள்ளது
மிகப்பெரிய தேர்தல் அறக்கட்டளைகளில் ஒன்றான ப்ரூடென்ட் எலெக்டோரல் டிரஸ்ட், பாஜகவுக்கு ரூ. 209.00 கோடி நன்கொடை அளித்துள்ளது. ஆனால், 2019-20ல் ரூ. 217.75 கோடி நன்கொடையாக அளித்தது. அதே சமயம் ஜெய்பாரத் எலெக்டோரல் டிரஸ்ட், 2020-21-ல் தனது மொத்த வருமானத்தில் ரூ.2 கோடியை பாஜகவுக்கு நன்கொடையாக வழங்கியது.
பாஜக, ஜேடியு, ஐஎன்சி, என்சிபி, ஆர்ஜேடி, ஆம் ஆத்மி,எல்ஜேபி ஆகிய ஏழு அரசியல் கட்சிகளுக்கு ப்ரூடென்ட் எலெக்டோரல் டிரஸ்ட் நன்கொடை அளித்துள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்களில், ஃபியூச்சர் கேமிங் & ஹோட்டல் சர்வீசஸ், அனைத்து நன்கொடையாளர்களிடையேயும் அதிகபட்சமாக ரூ. 100 கோடியை வழங்கியுள்ளது. ஹல்டியா எனர்ஜி இந்தியா லிமிடெட் ரூ. 25 கோடியும், மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட், பல்வேறு அறக்கட்டளைகளுக்கு ரூ.22 கோடியும் வழங்கியுள்ளன.
அறிக்கையின்படி, 2020-21ல் 159 நபர்கள் தேர்தல் அறக்கட்டளைகளுக்குப் பங்களித்துள்ளனர். ப்ரூடென்ட் எலெக்டோரல் டிரஸ்டுக்கு இரண்டு நபர்கள் ரூ.3.50 கோடியும், சிறு நன்கொடைகள் தேர்தல் அறக்கட்டளைக்கு 153 நபர்கள் ரூ.3.202 கோடியும், ஐன்சிகார்ட்டிக் எலெக்டோரல் டிரஸ்டுக்கு மூன்று பேர் மொத்தம் ரூ.5 லட்சமும் அளித்துள்ளனர்
டாப் 10 நன்கொடையாளர்கள் ரூ.223 கோடியை எலெக்டோரல் டிரஸ்ட்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். இது 2020-21ல் அறக்கட்டளைகள் பெற்ற மொத்த நன்கொடைகளில் 86.27 சதவீதமாகும்.
சிறு நன்கொடை தேர்தல் அறக்கட்டளை காங்கிரசுக்கு ரூ.3.31 கோடி நன்கொடை அளித்துள்ளது. அனைத்து ஏழு தேர்தல் அறக்கட்டளைகளிலிருந்தும் அனைத்துக் கட்சிகளும் பெற்ற மொத்த நன்கொடைகளில் 27 கோடி அல்லது 10.45 சதவீதத்தை JDU பெற்றுள்ளது.
மற்ற 10 அரசியல் கட்சிகளான INC, NCP, AIADMK, DMK, RJD, AAP, LJP, CPM, CPI, லோக் தந்திரிக் ஜனதா தளம் ஆகியவை மொத்தம் 19.23 கோடி ரூபாய் பெற்றுள்ளன.
ஏடிஆர் அறிக்கையில், ஆறு தேர்தல் அறக்கட்டளைகளுக்கு நன்கொடை அளிப்பவர்களின் விவரங்கள் தெரியவில்லை. இந்த அறக்கட்டளைகளுக்கு நன்கொடை அளிப்பது வரி விலக்கு பெறுவதற்கான வழிமுறையா அல்லது கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கான வழியா என்பது தெரியவில்லை. CBDT விதிகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்த தேர்தல் அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாளர்களின் விவரங்களும் வெளியிடப்பட வேண்டும். ஜனவரி 31, 2013க்குப் பிறகு உருவாக்கப்பட்ட அறக்கட்டளைகளுக்குப் பொருந்தும் இந்த விதியை, அனைத்து அறக்கட்டளைகளும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil