Aero India Bengaluru 2019 : இந்திய விமானப்படை சார்பில் ஏரோ இந்தியா ஷோ 2019 நாளையில் இருந்து பெங்களூருவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று விமானங்கள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் யாரும் சற்றும் எதிர்பாராத வகையில் இரண்டு விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதி தரையில் விழுந்து நொறுங்கியது.
ஏரோ இந்தியா ஷோ - பெங்களுருவின் பெருமைகளில் ஒன்றாக இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1996ம் ஆண்டு முதல் இந்த கண்காட்சி இங்கு நடைபெற்று வருகிறது. 2017ம் ஆண்டிற்கு பிற்கு இந்த கண்காட்சி நாளை தொடங்க இருப்பதால் பெங்களூர்வாசிகள் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர்.
Aero India Bengaluru 2019
எலஹங்கா விமான தளத்தில் நடைபெற்ற இந்த பயிற்சியில் மூன்று விமானிகள் ஈடுபட்டிருந்தனர். வடங்கு பெங்களூருவில் நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் சூர்ய கிரன் ஏரோபேடிக்ஸ் என்ற குழு விமான ஒத்திகை நடைபெற்றது. விழுந்து நொறுங்கும் சமயத்தில் இரண்டு விமானிகள் உயிர் தப்பிவிட்டனர். ஒரு விமானி உயிரிழப்பு. பொதுமக்களில் ஒருவருக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
வெகு ஆண்டுகளாகவே பெங்களூருவில் நடைபெற்று வந்த இந்த கண்காட்சியை குஜராத் மாநிலம் நலியா ஏர்பேஸ் (புஜ்) அல்லது உத்தரப் பிரதேசத்தில் இருக்கும் ஹிண்டன் எர் பேஸ் காசியாபாத், அல்லது ஆக்ராவில் இருக்கும் கேரியா ஏர் பேஸ் அல்லது லக்னோவில் இருக்கும் பக்சிக்கா தலாப் ஏர்பேஸில் நடத்தலாம் என்ற பரிசீலனையில் கடந்த ஆண்டு பிரதம அமைச்சகம் ஈடுபட்டு வந்தது.
மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தவுடன் இக்கண்காட்சியை பெங்களூருவில் நடத்த ஒப்புக்கொண்டது பாதுகாப்புத் துறை. ஆசிய பிராந்தியத்தின் மிகப் பெரிய விமான கண்காட்சி மற்றும் சாகச நிகழ்ச்சியாக இந்நிகழ்ச்சி கருதப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : ஏரோ இந்தியா 2019 விமான கண்காட்சி பெங்களூரில் தான் நடைபெறும் – மத்திய அரசு திட்டவட்டம்