கோவிட் -19 வைரஸ் பரவுவதைத் தடுக்க சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என, இந்திய அரசாங்கத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் வியாழக்கிழமை, மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏனெனில் SARS-CoV-2 வைரஸின் முக்கிய பரிமாற்ற முறைகளில் ஒன்றான ஏரோசோல்கள் 10 மீட்டர் வரை காற்றில் பயணம் செய்ய முடியும் என்று கூறியுள்ளது.
ஏரோசோல்கள் என்பது வைரஸ் உள்ள திரவத்துளி அல்லது வாயு-திரவ துகள் என கருதலாம்.
“பரவுதலை நிறுத்துங்கள், தொற்றுநோயை நசுக்குங்கள்”, “எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்: அறிகுறிகளைக் காட்டாதவர்களும் வைரஸைப் பரப்பலாம்” என்று அழைக்கப்படும் வழிகாட்டுதல்களின் தொகுப்பைப் அமைப்பு பகிர்ந்துள்ளது. சரியான காற்றோட்டம் மூலம் வைரஸ் பரவுவதைத் தடுக்கலாம். “ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைத்திருக்கும்போது ஏர் கண்டிஷனர்களை இயக்குதல், அறைக்குள் பாதிக்கப்பட்ட காற்றை நிரப்புதல் போன்றவை பாதிக்கப்பட்ட கேரியரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவும் அபாயத்தை அதிகரிக்கும்” என்று அமைப்பு கூறியுள்ளது.
அலுவலகங்கள், ஆடிட்டோரியங்கள், வணிக வளாகங்கள் மற்றும் பிற மூடிய பொது இடங்களில் கேபிள் விசிறி அமைப்புகள் மற்றும் கூரை வென்டிலேட்டர்களைப் பயன்படுத்தவும் இந்த ஆலோசனை அமைப்பு பரிந்துரைத்துள்ளது. "அடிக்கடி சுத்தம் செய்தல் மற்றும் வடிப்பான்களை மாற்றுவது போன்றவை மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது," என்றும் ஆலோசனை அமைப்பு பரிந்துரைத்துள்ளது.
ஏரோசல் மற்றும் நீர்த்துளி பரவுதல் பற்றி விளக்கிய ஆலோசகர், பாதிக்கப்பட்ட நபரின் நீர்த்துளிகள் மற்றும் ஏரோசோல்களின் வடிவத்தில் உமிழ்நீர் மற்றும் நாசி வெளியேற்றங்கள் வைரஸ் பரவுதலின் முதன்மையான பரவும் முறை என்று கூறினார்.
சுற்றுப்புறத்தின் வழியாக வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பதைப் பற்றி பேசுகையில், “பாதிக்கப்பட்ட நபரால் வெளிப்படும் நீர்த்துளிகள் சுற்றுப்புறத்தின் பல்வேறு மேற்பரப்புகளில் இறங்குகின்றன. அங்கு அவை நீண்ட காலம் உயிர்வாழ முடியும். எனவே, கதவு கைப்பிடிகள், லைட் சுவிட்சுகள், மேசைகள், நாற்காலிகள் போன்றவற்றை ப்ளீச் மற்றும் ஃபீனைல் போன்ற கிருமிநாசினிகளைக் கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. ”
பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து மற்றொன்றுக்கு பரவும் அபாயத்தை நீர்த்துப்போகச் செய்வதில் நன்கு காற்றோட்டமான இடங்களின் முக்கியத்துவத்தையும் இந்த ஆவணம் எடுத்துக்காட்டுகிறது. "ஜன்னல்கள் மற்றும் கதவுகளைத் திறப்பதன் மூலமும், வெளியேற்ற அமைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலமும் வாசனையை காற்றில் இருந்து நீர்த்துப்போகச் செய்வது போல, மேம்பட்ட திசைக் காற்று ஓட்டத்துடன் காற்றோட்டமான இடங்கள், காற்றில் திரட்டப்பட்ட வைரஸை வெளியேற்றுவதன் மூலம், பரவும் அபாயத்தைக் குறைக்கின்றன,"
வைரஸைக் கட்டுப்படுத்தவும் எதிர்த்துப் போராடவும் அரசாங்கம் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை பட்டியலிட்டு, கிராமப்புற மற்றும் சிறிய நகர்ப்புறங்களில் சமூக அளவிலான சோதனை மற்றும் தனிமைப்படுத்தப்படல் போன்றவை வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் கூறின. “இப்பகுதியில் நுழையும் மக்களுக்கு விரைவான ஆன்டிஜென் சோதனைகள் செய்யப்பட வேண்டும். சோதனைகளை நடத்தும் சுகாதார ஊழியர்களுக்கு N95 முகக்கவசங்கள் கொடுக்கப்பட வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட நபர்களைக் கண்காணிக்க ஆக்சிமீட்டர்கள் வழங்கப்பட வேண்டும், ”என்று ஆலோசகர் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil