scorecardresearch

ஆப்கானில் காத்திருக்கும் இந்து, சீக்கியர்கள் : உயிர்பிழைத்தும் இந்தியா திரும்புவதில் நீடிக்கும் சிக்கல்

“ஆகஸ்ட் 31 ஆம் தேதி அமெரிக்க துருப்புகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதற்கான காலக்கெடு என்பதால் நாங்கள் வெளியேற்றப்படுவோமா என்பது கூட எங்களுக்குத் தெரியாது”

afghan

வியாழக்கிழமை காபூல் விமான நிலையம் அருகே நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்தனர். எனினும் துரிதமாக செயல்பட்டதால் இந்தியா வரவிருந்த சுமார் 210 ஆப்கான் சீக்கியர்கள் மற்றும் இந்துக்களின் உயிர் காப்பாற்றப்பட்டது.

காபூல் விமான நிலைய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டதாகவும், தாலிபான் அமைப்பை சேர்ந்த பலர் காயமடைந்ததாகவும் தாலிபான் அமைப்பு கூறியுள்ளது. எனினும் பொதுமக்கள் மற்றும் அமெரிக்க வீரர்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்ததாக அமெரிக்காவின் ராணுவ தளமான பென்டகன் தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை, ஆப்கானிஸ்தான் சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் அடங்கிய 140 பேர் கொண்ட குழு டெல்லி செல்வதற்காக காபூல் விமான நிலையம் வரவிருந்தனர். வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இந்த குழு மீண்டும் குருத்வாராவுக்கு திரும்ப வேண்டியிருந்தது. பேருந்து அவர்களை ஏற்றிச் சென்றபோது விமான நிலையத்திற்கு அருகே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை மற்றும் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் பாதுகாப்பாக குருத்வாரா திரும்பினர்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸுடன் தொலைபேசியில் பேசிய குல்விந்தர் சிங், “மற்ற ஆப்கானிய சீக்கியர்கள் மற்றும் இந்துக்களுடன் சேர்ந்து காபூலில் உள்ள குருத்வாரா தஷ்மேஷ் பிதா குரு கோவிந்த் சிங் கார்தே பர்வானில் தஞ்சம் அடைந்ததாக கூறினார். அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்த அவர் நாங்கள் யாரும் விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் அல்லது வெடி விபத்து நடந்த இடத்தில் இல்லை,” என்றார்.

விமான நிலையத்திற்கு வெளியே குண்டு வெடித்ததால், இந்தியா திரும்புவதற்காக மேலும் அவர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படலாம் என குழுவை சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர். விமான நிலையத்திலிருந்து வெறும் 10 கிமீ தொலைவில் இருந்தாலும், இந்தியாவுக்குத் திரும்புவதற்காக காத்திருப்பது ஒரு முடிவற்ற காலம் போல இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய ஆப்கானிய சீக்கியர் ஒருவர் கூறுகையில், “வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் விமான நிலையத்திற்கு வெளியே தலிபான்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் குருத்வாராவுக்குத் திரும்ப வேண்டியிருந்தது. நாங்கள் ஏழு பேருந்துகளில் பயணம் செய்தோம். மேலும் ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப்பின் இரண்டு புனித நூல்களை எடுத்துச் சென்றோம். நாங்கள் இந்தியாவுக்கு செல்லும் விமானத்தில் ஏற வேண்டியிருந்தது. விமான நிலையத்திற்கு வெளியே நீண்ட வரிசைகளில் மக்கள் நின்றிருந்தனர். பின்னர் திடீரென துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. எங்கள் குழுவில் பெண்களும் குழந்தைகளும் இருந்தனர். இதையடுத்து 12 மணிநேரம் முயற்சி செய்து விமான நிலையத்திற்கு சென்றும், குருத்வாராவுக்குத் திரும்ப முடிவு செய்தோம்.

தற்போது விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பு நடந்துள்ளதால் எங்களை அழைத்து செல்ல ஏதேனும் விமானம் ஏற்பாடு செய்யப்படுமா என்பது பற்றி இந்திய அரசிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. ஆகஸ்ட் 31 ஆம் தேதி அமெரிக்க துருப்புகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதற்கான காலக்கெடு என்பதால் நாங்கள் வெளியேற்றப்படுவோமா என்பது கூட எங்களுக்குத் தெரியாது. அதன் பிறகு விமான நிலையம் கூட தாலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்துவிடும்” என கூறினார்.

அமெரிக்காவை சேர்ந்த யுனைடெட் சீக்கியர்கள் ஒரு கூறுகையில், “மைதானத்தில் உள்ள குழுக்களின் உதவியுடன் புதன்கிழமை, அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள காபூல் சர்வதேச விமான நிலையத்தின் வடக்கு வாயிலுக்குச் செல்ல ஒன்பது மினி பஸ்கள் மூலம் முயற்சித்தோம்.

அமெரிக்கப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையிலான மோதல்கள் காரணமாக ஆரம்ப முயற்சி தோல்வியடைந்தது.
இதையடுத்து பாதுகாப்பான இடத்திற்கு கேரவன் பின்வாங்கியது. தொடர்ந்து மாலை மற்றும் அதிகாலையில் நார்த் கேட்டை அடைய முயற்சித்தோம். ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகளை ஏற்றிச் சென்ற அந்த கேரவன் விமான நிலையத்தை நெருங்கியபோது துப்பாக்கிச் சூடு நடந்தது.

இதில் ஒருவாகனம் தாக்கப்பட்டாலும் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் வியாழக்கிழமை அதிகாலை 2:00 மணியளவில் காபூலின் தெருக்களில் 18 மணி நேரத்திற்குப் பிறகு குருத்வாரா கார்டே பர்வானுக்கு கேரவன் பின்வாங்க வேண்டியிருந்தது” என்றார் . ஆப்கானிஸ்தான் குடிமக்களை விமான நிலையத்திற்குள் நுழைய அனுமதிப்பதில்லை என தலிபான் தலைமை அறிவித்துள்ளது.

“காபூல் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு நடந்ததால், நிலைமை இப்போது மிகவும் மோசமாக உள்ளது. ஆப்கானிய சீக்கியர்கள் மற்றும் இந்துக்களின் அடுத்த குழு எப்போது வெளியேற்றப்படும் என்பது நிச்சயமற்றது ”என்று டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மை குழு (டிஎஸ்ஜிஎம்சி) முன்னாள் தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா கூறினார்.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து இதுவரை 70 ஆப்கானிய சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் இரண்டு குழுக்களாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.தற்போது 210 ஆப்கானிய சீக்கியர்களும் இந்துக்களும் விமானத்தைப் பிடிக்க காத்திருக்கிறார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Afghan sikhs hindus wait in fear after taliban gunfire explosions delay evacuation attempts

Best of Express