இந்த ஆண்டு ஏப்ரலில், நேபாளத்தில் உள்ள அன்னபூர்ணா மலையில் 6,000 மீட்டர் உயரத்தில் 70 மீட்டர் ஆழமான பள்ளத்தில் இறங்கியபோது, மலை ஏறும் வீரரான அனுராக் மாலூவின் கண்கள் சிமிட்டியது மீட்புக் குழுவினருக்கு நம்பிக்கையை அளித்தது.
ஆங்கிலத்தில் படிக்க: After 200 days in hospital, rescued climber Anurag Maloo eyes Mt Annapurna summit again
இரண்டு போலந்து மலையேறும் வீரர்களான ஆடம் பீலெக்கி மற்றும் மரியஸ் ஹடலா ஆகியோர் தங்கள் மலையேற்றத் திட்டத்தைக் கைவிட்டு, அனுராக் மாலூவை அவர் காணாமல் போன மூன்று நாட்களுக்குப் பிறகு பனிக்கட்டிப் பள்ளத்தில் இருந்து மீட்டனர்.
உலகின் 10வது உயரமான மலையான 8,091 மீட்டர் அன்னபூர்ணா மலையின் உச்சியில் 21 நாள் பயணத்தின் போது, ராஜஸ்தானின் கிஷன்கரைச் சேர்ந்த 34 வயதான அனுராக் மாலூ தவறான கயிற்றைத் தேர்ந்தெடுத்தார், அந்த முடிவு அவரது பேரழிவுக்கு வழிவகுத்தது.
இரண்டு நாடுகளில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கிட்டத்தட்ட 200 நாட்களுக்குப் பிறகு, அக்டோபர் 31 அன்று, அனுராக் மாலூ புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஏப்ரல் மாதம் அவர் மீட்கப்பட்ட பிறகு, போகாராவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் மருத்துவர்கள் நான்கு மணி நேரம் அவரை உயிர்ப்பிக்க முயன்றனர். பின்னர் அவர் காத்மாண்டுவில் உள்ள மெடிசிட்டி மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார், பின்னர் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவருக்கு இதயம், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் போன்ற உறுப்பு பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிசியோதெரபிக்குப் பிறகு சில நாட்களுக்கு முன்பு நடக்கத் தொடங்கிய அனுராக் மாலூவின் வலது கை மற்றும் உடற்பகுதியில் ஏற்பட்ட உறைபனியை குணப்படுத்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது.
வீட்டில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால், புன்னகையோடும், ஆனந்தக் கண்ணீரோடும், சாமந்தி மலர் மாலைகளோடும் அனுராக் மாலூ வரவேற்கப்பட்டார்; அதிர்ச்சியிலிருந்து தான் கற்றுக்கொண்டதை மாலூ பகிர்ந்து கொள்கிறார்: "ஒவ்வொரு கணமும் வாழ்வது".
கிஷன்கரில் இருந்து இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய அனுராக் மாலூ, “வாழ்க்கை அழகானது. நீண்ட காலமாக மருத்துவமனையில் இருந்த பிறகு நீங்கள் உணர்ந்த ஒரு விஷயம் என்னவென்றால், நீங்கள் ஒவ்வொரு கணமும் வாழத் தொடங்குவது நல்லது. ஏழு மாதங்களுக்கும் மேலாக நான் வீட்டில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.”
இருண்ட குழியில் நீண்ட தனிமையான நாட்களைப் பற்றி பேசும்போது அனுராக் மாலூ தத்துவார்த்தமாகிறார். “வீழ்ச்சிக்குப் பிறகு நான் என் தாயின் வயிற்றில் ஒரு குழந்தையைப் போல இருந்தேன். அன்னபூர்ணா மலை, அன்னை தெய்வம் என்னைக் காப்பாற்றியது, அதனால்தான் நான் இங்கே இருக்கிறேன், வீட்டிற்கு வந்தேன்.”
அனுராக் மாலூவுக்கு அவர் மீட்கப்பட்டதற்கு பிந்தைய நாட்கள் அதிகம் நினைவில் இல்லை. “என்னை காத்மாண்டுவுக்கு மாற்றுவதற்கு முன்பு மருத்துவர்கள் 4 மணி நேரம் சி.பி.ஆர் கொடுத்த போகாராவில் உள்ள மருத்துவமனையில் நான் இருந்த நாட்கள் மற்றும் பனிப்பிளவில் மாட்டிக் கொண்ட நாட்கள் பற்றிய நினைவுகள் எதுவும் என்னிடம் இல்லை. நான் சுயநினைவுக்கு வருவதற்கு முன்பு காத்மாண்டுவில் இருந்த 10-12 நாட்களில் எதுவும் நினைவில் இல்லை, மேலும் எனது உடல் மற்றும் வலது கையில் காயம் பட்டதை நான் பார்த்தேன்," என்று அனுராக் மாலூ கூறினார். டாக்டர் மனீஷ் சிங்கால், டாக்டர் சுவாஷிஸ் டாஷ், நர்சிங் ஊழியர்கள் மற்றும் அவரை கவனித்துக்கொள்வதற்கும் பிரார்த்தனை செய்ததற்கும் அவரது பெற்றோர்கள், சகோதரர் ஆஷிஷ் மற்றும் மைத்துனர் ஷிகா ஆகியோருக்கு அனுராக் மாலூ நன்றி தெரிவிக்கிறார்.
அனுராக் மாலூ எய்ம்ஸ் அவசர சிகிச்சை மையத்திலும், தீக்காயங்கள் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை ஐ.சி.யூ.,விலும் சிகிச்சை பெற்றார்.
அவரது மரண அனுபவத்தால் பதற்றமடையாமல், அனுராக் மாலூ, ஒரு உண்மையான மலையேறுபவர் போல, அன்னபூர்ணா மலையின் மேல் மீண்டும் தனது பனிக் கோடாரியை நடுவதற்கு ஏற்கனவே யோசிக்கத் தொடங்கி விட்டார். “அன்னபூர்ணா மலை ஏறுவதற்கு கடினமான மலை என்றும், நான் 8,000 மீட்டர்கள் மலை ஏற முயற்சித்தால், அதற்கு அன்னபூர்ணா மலை தான் சரியாக இருக்கும் என்றும் நான் எப்போதும் நம்புகிறேன். அன்னபூர்ணா மலையை நான் தாய் மலையாக இணைக்கிறேன், என்னால் அன்னபூர்ணா மலையை ஏற முடிந்தால், உலகில் வேறு எந்த மலையையும் என்னால் ஏற முடியும்,” என்று ஸ்விஸ் நிறுவனமான சீட்ஸ்டார்ஸில் சர்வதேச மேம்பாட்டு ஆலோசகராக பணிபுரியும் அனுராக் மாலூ கூறுகிறார்.
தனது எதிர்கால மலை ஏறும் திட்டங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது, அனுராக் மாலூ பெரிய தவறான தேர்வு செய்த நாளை நினைவுக்குக் கொண்டு வருகிறார். சிகரத்தை அடைவதற்கான ஒரு கைவிடப்பட்ட முயற்சியைத் தொடர்ந்து, முகாம் 3ல் இருந்து முகாம் 2 க்கு இறங்கும் போது, ஏப்ரல் 17 அன்று அனுராக் மாலூ ஆழமான பனிக்கட்டியில் விழுந்தார்.
"நான் தவறான கயிற்றை தேர்ந்தெடுத்தேன். என் ஷெர்பா எனக்கு பின்னால் இருந்ததால் எந்த கயிற்றை எடுப்பது என்று தெரியவில்லை. என் ஷெர்பா எனக்கு முன்னால் இருந்தால், எந்த கயிற்றை எடுக்க வேண்டும் என்று அவருக்குத் தெரிந்திருக்கும். நான் பாடம் கற்றுக்கொண்டேன்,” என்று அனுராக் கூறுகிறார்.
அவரைக் காப்பாற்றிய இரண்டு போலந்து மலை ஏறுபவர்களைப் பற்றி பேசும்போது, மாலூ மிகவும் உணர்ச்சிவசப்படுகிறார். ஆடம் மற்றும் மரியஸ் என்ற இருவர், மலையேறுபவர்களின் எழுதப்படாத ப்ரோ-குறியீட்டைப் பின்பற்றினர், அதாவது மற்றவர்களுக்கு உதவ அவர்களின் திறமையைப் பயன்படுத்தினர். “ஆடமின் மீட்பு வீடியோவைப் பார்க்கும்போது எனக்கு உண்மையிலேயே மெய்சிலிர்க்கிறது. ஆடம் என்னைப் பார்த்ததும் என் முகத்தில் டார்ச்சை அடித்ததும் என் உடலை வெளியே கொண்டு வரத் திட்டமிட்டனர். அவர் என் கண்கள் இமைப்பதையும், மூச்சு விடுவதையும் பார்த்தார், அதனால் நான் உயிருடன் இருப்பதை அவர் கவனித்தார். அந்த ஆழமான பள்ளத்தில் கப்பி அமைப்பு மூலம் என்னை மீட்பது அந்த நேரத்தில் அவரால் மட்டுமே செய்ய முடிந்தது,” என்று அனுராக் மாலூ கூறினார்.
ஆடம் குணமடைந்த பிறகு அவருடன் உரையாடியதையும் பகிர்ந்து கொள்கிறார். "என் உயிரைக் காப்பாற்ற அவர் செய்த அனைத்திற்கும் நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன். என் உயிரைக் காப்பாற்றிய மனிதனுக்கு நான் இன்னும் என்ன சொல்ல முடியும்? என்னை மீட்பதற்காக டீம் மற்றும் ஆடம் மற்றும் மற்றவர்கள் எடுத்த அனைத்து இடர்களின் காரணமாக நான் இங்கே இருக்கிறேன். இது அனைவருக்கும் நடக்காது. வாழ்க்கை குறுகியது மற்றும் சிறியது, மேலும் (அது) சிறந்தது (அது) நீங்கள் ஒவ்வொரு நாளும் வாழ்கிறீர்கள். என் கதையை உலகம் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மேலும் நான் குணமடைந்து மீண்டும் மலையேறத் தொடங்குவேன் என்று நம்புகிறேன்,” என்று அனுராக் மாலூ கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.