30 ஆண்டுகளுக்கு மேலாக ஜம்மு காஷ்மீரில் முஹர்ரம் ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், 8-வது முஹர்ரம் ஊர்வலத்தை ஸ்ரீநகரின் மையப் பகுதி வழியாக இன்று (வியாழக்கிழமை) மேற்கொள்ள ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
எனினும் இதற்கு நிர்வாகம் நேரக் கட்டுப்பாடு விதித்துள்ளது. ஸ்ரீநகர் துணை கமிஷனர் அஜாஸ் ஆசாத் நேற்று வெளியிட்ட உத்தரவில், ஜூலை 27, 2023-ம் ஆண்டு 8-வது முஹர்ரம் ஊர்வலம்-1445 காலை 6 மணி முதல் 8 மணி வரை குரு பஜாரில் இருந்து புட்ஷா கடல் மற்றும் ஸ்ரீநகர் எம்.ஏ சாலை வழியாக டல்கேட் வரை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
"இந்த ஊர்வலப் பாதையானது வணிக நிறுவனங்கள், ஆம்புலன்ஸ், மாணவர்கள், அலுவலக ஊழியர்கள், பொதுப் பயணிகள் போன்றவர்களின் நடமாட்டத்தை உள்ளடக்கியதாக இருப்பதால், பொதுமக்களின் நலன் கருதி நேரம் விதிக்கப்பட்டுள்ளது என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
பிரிவினைவாத இயக்கத்துடன் தொடர்பு கொண்டுள்ளனர்கள் எனக் குற்றச்சாட்டு எழுந்ததால் அரசாங்கம் 30 ஆண்டுகளுக்கு மேலாக அனுமதி வழங்கவில்லை. 1990 இல் ஜே & கே இல் போர் சூழ்நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டது.
புதன்கிழமை வெளியிட்ட உத்தரவில், ஊர்வலத்தின் போது எந்தவொரு தேசவிரோத பேச்சு, முழக்கங்கள் அல்லது பிரச்சாரங்களில் ஈடுபட கூடாது. ஊர்வலத்தின் போது "மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு பாதகமான" எந்த நடவடிக்கையும் இருக்கக்கூடாது. எந்தவொரு தேசிய சின்னத்தையும் அவமதிக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், ஊர்வலத்தின் போது, பயங்கரவாத அமைப்புகளின் புகைப்படங்கள், தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் சின்னங்களை சித்தரிக்கும் எந்த கொடியையும் ஏற்றக்கூடாது. ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் பங்கேற்பாளர்களின் செயல்பாடுகள் திட்டத்தில் மட்டுமே கண்டிப்பாக இருக்க வேண்டும். பொது நலன் கருதி அவர்கள் விரும்பும் உள்ளூர் காவல்துறை மற்றும் பிற பாதுகாப்பு நிறுவனங்களுடன் அவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரியமாக, ஷியா பிரிவினர் பள்ளத்தாக்கில் இரண்டு பெரிய ஊர்வலங்களை ஏற்பாடு செய்கின்றனர் - 8வது முஹர்ரம் ஊர்வலம் நகரின் ஷாஹீத் குஞ்ச் பகுதியிலிருந்து தொடங்கி, சிட்டி சென்டர் லால்சௌக் வழியாகச் சென்று ஸ்ரீநகரின் டல்கேட் சுற்றுப்புறத்தில் முடிவடைகிறது; 10 வது முஹர்ரம் ஊர்வலம் நகரின் ஷியா மக்கள் நிறைந்த பகுதிகள் வழியாக செல்கிறது.
8 வது முஹர்ரம் ஊர்வலங்கள் பாரம்பரியமாக பிரிவினைவாத கூட்டமைப்பான ஹுரியத் மாநாட்டின் அங்கமான இத்திஹாதுல் முஸ்லிமீனால் ஏற்பாடு செய்யப்படுகிறது. இதில் ஏராளமான சுன்னி பிரிவு மக்களும் பங்கேற்கின்றனர்.
தடை இருந்தபோதிலும், ஷியா பிரிவினர் கட்டுப்பாடுகளை மீறி, ஒவ்வொரு ஆண்டும் குரு பஜாரில் இருந்து ஊர்வலம் சென்றனர், அது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”