Advertisment

கிறிஸ்தவர்களை அடுத்து, ஈத் பெருநாளில் முஸ்லிம்களை அணுக கேரள பா.ஜ.க திட்டம்

ஈஸ்டர் தினத்தில் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த மக்களின் வீடுகளுக்கு பா.ஜ.க சென்றது கேரளாவில் அரசியல் விவாதத்தைத் தூண்டியது. இதை ஆளும் இடதுசாரிகளும் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் பா.ஜ.க-வை விமர்சித்தன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kerala, Kerala BJP, Kerala BJP Christians, K Surendran christians bjp outreach, கேரளா, பாஜக, கிறிஸ்தவர்கள், ஈஸ்டர், முஸ்லிம்கள், ஈத் பெருநாள், Kerala BJP christians outreach, Eid, Kerala muslim community outreach, Kerala BJP, Indian Express, india news

ஈத் பெருநாளில் முஸ்லிம்களை அணுக கேரள பா.ஜ.க திட்டம்

ஈஸ்டர் தினத்தில் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த மக்களின் வீடுகளுக்கு பா.ஜ.க சென்றது கேரளாவில் அரசியல் விவாதத்தைத் தூண்டியது. இதை ஆளும் இடதுசாரிகளும் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் பா.ஜ.க-வை விமர்சித்தன.

Advertisment

ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ சமூகத்தினரை சந்தித்த முயற்சிக்குப் பிறகு, கேரள பா.ஜ.க அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக மாநிலத்தில் உள்ள மற்ற கணிசமான சிறுபான்மை சமூகத்தை தீவிரமாக ஈர்க்க உள்ளது. ஈத் பெருநாளில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் வீடுகளுக்குச் செல்லும் திட்டங்களுடன் உள்ளதால் இது அடுத்த வாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈஸ்டர் தினத்தில் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த மக்களின் வீடுகளுக்கு பா.ஜ.க சென்றது கேரளாவில் அரசியல் விவாதத்தைத் தூண்டியது. இதை ஆளும் இடதுசாரிகளும் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் பா.ஜ.க-வை விமர்சித்தன.

பா.ஜ.க மூத்த தலைவரும், கேரள மாநில பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர் புதன்கிழமை கொச்சியில் நடைபெற்ற பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தைத் தொடர்ந்து மாநில பிரிவுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினார். பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பா.ஜ.க தொண்டர்கள் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் வீடுகளுக்குச் சென்று கட்சியின் வாழ்த்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், விஷூ தினத்தன்று, பாஜகவினர் தங்கள் வீடுகளைத் திறந்து வைத்து மற்றவர்களுடன் கொண்டாட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

பிரகாஷ் ஜவடேகர், “அனைத்துப் பிரிவினரையும் அனைத்து சமூகங்களைச் சேர்ந்த மக்களையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நனவாக்க பா.ஜ.க தொண்டர்கள் பாடுபடுகிறார்கள். ஈஸ்டர் தினத்தன்று பா.ஜ.க-வினர் கிறிஸ்தவர்களின் வீடுகளுக்குச் சென்று பிரதமரின் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இது பெரிய வெற்றி” என்று கூறினார்.

பா.ஜ.க-வின் கிறிஸ்தவ பரப்புரைத் திட்டம் கேரளாவில் அரசியல் விவாதத்தைத் தூண்டியது. ஆர்.எஸ்.எஸ் முன்பு கிறிஸ்தவர்கள் உட்பட சிறுபான்மையினர், கம்யூனிஸ்டுகள் இந்தியாவிற்கு உள் அச்சுறுத்தல்கள் என்று கூறியதை சிபிஐ(எம்) சுட்டிக்காட்டியது. பா.ஜ.க தலைவர்கள் கிறிஸ்தவ பேராயர்களை சந்திக்க வந்ததற்காக சிபிஐ(எம்) மற்றும் காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் விமர்சனம் செய்தன. வடஇந்தியாவில் உள்ள தேவாலயங்கள் மீது இந்துத்துவா அமைப்புகளின் செயல்பாட்டாளர்களால் நடத்தப்படும் தாக்குதல்களை இரண்டு கட்சிகளின் தலைவர்களும் சுட்டிக்காட்டினர்.

சிபிஐ(எம்) மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் சிறுபான்மையினரின் வாக்கு வங்கியை இழந்து தவித்து வருவதால், சிறுபான்மையினரை அணுகுவதை பா.ஜ.க ஆதரிக்கிறது.

கிறிஸ்தவ சமூகத்துடன் நெருங்கி பழகுவதற்கான பாஜகவின் முயற்சி கேரளாவில் உள்ள மதகுருக்களை பிளவுபடுத்தியுள்ளது. காலம் மாறிவிட்டது, சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நாட்டிற்கு உள் அச்சுறுத்தலாக உள்ளனர் என்ற சிறுபான்மையினருக்கு எதிரான கடந்தகால கருத்துகளுக்காக காவி கட்சியை ஒதுக்கி வைக்கக் கூடாது என்ற அடிப்படையில் ஆயர்களின் ஒரு பகுதி இந்த நடவடிக்கையை வரவேற்றது. மற்றொரு பிரிவினர் பா.ஜ.க-வின் கீழ் கிறிஸ்தவர்களுக்கு எதிரான அட்டூழியங்களை மறைக்க சங்பரிவாரத்தை நோக்கி ஈர்க்கும் காரணியாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றனனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Bjp Kerala Muslim
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment