டெல்லியில் மதுபான உரிமங்களுக்கு ஈடாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு 100 கோடி ரூபாய் வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) தலைவர் கே.கவிதாவை மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ) வியாழக்கிழமை கைது செய்தது.
ஆங்கிலத்தில் படிக்க: After ED, now CBI arrests K Kavitha in Delhi liquor policy case
இந்த விவகாரம் தொடர்பாக கவிதா தற்போது திகார் சிறையில் அமலாக்கத்துறையின் (ED) காவலில் உள்ளார். கடந்த மார்ச் 15ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் இல்லத்தில் கவிதா கைது செய்யப்பட்டார்.
கவிதாவை விசாரிக்க டெல்லி நீதிமன்றம் மத்திய புலனாய்வு அமைப்புக்கு அனுமதி வழங்கிய சில நாட்களுக்குப் பிறகு இந்த கைது நடவடிக்கை வந்துள்ளது. சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா, ஒரு நாள் முன்பு சம்பந்தப்பட்ட சிறைக் கண்காணிப்பாளரிடம் எழுத்துப்பூர்வமாக நோட்டீஸ் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, கவிதாவின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய சிறைக்குச் செல்ல சி.பி.ஐ.,க்கு அனுமதி அளித்தார்.
அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கவிதாவை இந்த வழக்கில் முக்கிய சதிகாரர்களில் ஒருவராக அமலாக்கத்துறை குறிப்பிட்டது. அமலாக்கத்துறை, அதன் ரிமாண்ட் அறிக்கையில், "அவர் ஆம் ஆத்மியின் உயர்மட்ட தலைவர்களுடன் சதி செய்து அவர்களுக்கு ரூ. 100 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும், அதற்கு மாற்றாக, டெல்லி கலால் கொள்கையை உருவாக்கி செயல்படுத்துவதில் தேவையற்ற சலுகைகளைப் பெற்றதாகவும்" கூறியுள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுடன் கவிதா ஒரு ஒப்பந்தத்தை "திட்டமிட்டார்" என்றும் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டது, அதில் கவிதா, 'சவுத் குரூப்' இன் மற்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து, கலால் கொள்கை உருவாக்கத்திற்கான அணுகலைப் பெற இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம் கொடுத்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“