/tamil-ie/media/media_files/uploads/2021/11/cop23.jpg)
Amitabh Sinha
COP26 news in tamil : இந்தியாவின் ஐந்து முக்கிய அறிவிப்புகளுக்கு பிறகு, உலக அளவில் மீத்தேன் உமிழ்வு 2030ம் ஆண்டுக்குள் 30% குறைக்கப்படும் என்றும், காடுகள் அழிப்பதைத் தடுத்து நிறுத்தப்படும் என்ற உறுதிமொழிகளோடு கிளாஸ்கோ மாநாட்டின் இரண்டாம் நாள் சூடுபிடிக்க துவங்கியது.
மீத்தேன் மிகவும் ஆபத்தான பசுமையக வாயு. இது கார்பன் டை ஆக்ஸைடைக் காட்டிலும் 80% பூமியை வெப்பமாக்கும் சாத்தியத்தைக் கொண்ட வாயுவாகும். கார்பன் டை ஆக்சைடுடன் ஒப்பிடும் போது இது வளிமண்டலத்தில் கணிசமாக குறைந்த நேரமே உள்ளது.
உலக அளவில் உமிழ்வைக் குறைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ள கார்பன் டை ஆக்ஸைடு இல்லாத இரண்டாவது பசுமையக வாயு மீத்தேன் ஆகும். 2016ம் ஆண்டில் உலகம் முழுவதும் ஹைட்ரோஃப்ளோரோகார்பன் பயன்பாடு குறைக்கப்படும் என்ற ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த வாயுக்கள் அதிக அளவில் ஏ.சி., குளிர்சாதனப் பெட்டி மற்றும் ஃபர்னிச்சர் தொழிற்சாலைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வெப்பமயமாக்கும் தன்மையை ஒப்பிட்டால் மீத்தனைவிட மிகவும் ஆபத்தானவை இந்த ஹைட்ரோஃப்ளோரோகார்பன்.
எவ்வாறாயினும், மாண்ட்ரீல் நெறிமுறையின் கீழ் செய்யப்பட்ட HFC குறைப்பு ஒப்பந்தத்தைப் போலல்லாமல், உலகளாவிய பசுமையக வாயுக்கள் உமிழ்வில் 17%-த்தைக் கொண்டிருக்கும் மீத்தேன் மீதான குறைப்பு அறிவிப்பானது ஒரு கட்டமைக்கப்பட்ட அல்லது முறையான ஒப்பந்தம் மூலம் அறிவிக்கப்படவில்லை.
தற்போதைய நிலவரப்படி, இது ஒரு சில நாடுகளின் கூட்டு உறுதிமொழி மட்டுமே. அனைத்து உலக நாடுகளும் முழுமையாக ஏற்றுக் கொண்ட அறிவிப்பு இது அல்ல. அதை செயல்படுத்துவது தனிப்பட்ட கையொப்பமிட்டவர்களின் பொறுப்பாகும்.
காடுகளை அழிவில் இருந்து காத்தல்
2030ஆம் ஆண்டுக்குள் காடுகளை அழிப்பதை நிறுத்தும் அறிவிப்பும் இவ்வாறான ஒன்றாகவே அறிவிக்கப்பட்டது. 100 நாடுகளுக்கும் மேல் இந்த அறிவிப்பில் கையெழுத்திட்டனர். இருப்பினும் இந்த ஒப்பந்தமும் முறையான ஒப்பந்தம் அல்ல. எவ்வாறாயினும், இந்த உறுதிமொழிகள் ஒரு முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது. இது முழுமையாக நிறைவேற்றப்படுமானால், வெப்பநிலையில் நிலையான உயர்வைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்தியா இந்த இரண்டு உறுதிமொழிகளிலும் கையெழுத்திடவில்லை. மீத்தேன் வெளியேற்றத்தின் முக்கிய ஆதாரங்களில் ஒன்று விவசாயம் மற்றும் கால்நடைகள் ஆகும், இதன் காரணமாக இந்தியா போன்ற விவசாயம் சார்ந்த பொருளாதாரங்களில் இது மிகவும் முக்கியமான விஷயமாகும். மீத்தேன்களை அதிக அளவில் வெளியேற்றும் மற்ற நாடுகளான சீனா, ரஷ்யாவும் கூட இந்த உறுதிமொழிகளில் கையெழுத்திடவில்லை. ஆனாலும் இவ்விரு நாடுகளும் காடுகளை அழிவில் இருந்து மீட்கும் உறுதிமொழியில் கையெழுத்திட்டன.
காலநிலை தொடர்பான மாநாடுகளில் இது போன்ற உறுதிமொழிகள் அறிவிக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் முந்தைய முயற்சிகள் எதுவும் நீண்ட காலமாக நிலைத்திருக்கவில்லை. குறைந்த பட்சம் காடுகளை அழிப்பதில், இதுபோன்ற பல உறுதிமொழிகள் அல்லது கூட்டணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்முயற்சியில் வந்த மீத்தேன் உமிழ்வு குறைப்பு உறுதிமொழி முதன்முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், செவ்வாயன்று நடந்த காலநிலை மாநாட்டில் அறிவிக்கப்பட்ட இரண்டு முக்கிய முடிவுகளுக்கு பின்னால் இந்தியா உள்ளது. ஒன்று, Resilient Island States (IRIS) மற்றும் the One Sun One World One Grid.
மிகச்சிறிய தீவு நாடுகளில் உள்கட்டமைப்பை வலிமைப்படுத்துவதை உறுதி செய்ய, அதன் மூலம் தீவு நாடுகளில் ஏற்படும் பேரழிவில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவால் தொடங்கப்பட்ட பேரழிவு தாங்கும் உள்கட்டமைப்பு (சிடிஆர்ஐ) கூட்டணியின் முதல் பெரிய திட்டமாக ஐ.ஆர்.ஐ.எஸ். இருந்தது.
சர்வதேச சோலார் கூட்டணி திட்டமான தி ஒன் சன் ஒன் வேர்ல்ட் ஒன் க்ரிட் திட்டம் இந்தியாவால் உருவாக்கப்பட்ட திட்டமாகும். இது உலக அளவில் பொதுவான சோலார் கட்டத்தை உருவாக்க முயல்கிறது.
கடந்த இரண்டு நாட்களில் பிரதமர் நரேந்திர மோடியுடன் பல சந்தர்ப்பங்களில் மேடையைப் பகிர்ந்து கொண்ட இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் முன்னிலையில் இந்த இரண்டு முன்னெடுப்புகளுக்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன. One Sun One World One Grid திட்டத்தை 80 நாடுகள் ஏற்றுக் கொண்டன.
ஆனால் இவை மட்டுமல்ல. காலநிலை திட்டங்களில் பல திருத்தங்களையும் பல்வேறு நாடுகள் அறிவித்தன.
2060-ல் நெட்-ஜீரோ இலக்கை வைத்த ப்ரேசில் தற்போது அதனை 2050-ம் ஆண்டுக்கு மாற்றியுள்ளது. 2030ம் ஆண்டில் உமிழ்வு உச்சத்தில் இருக்கும் என்றும் 2060-ல் உமிழ்வு நிகர ஜீரோவாக கொண்டு வரப்படும் என்றும் சீனா தன்னுடைய திட்டம் குறித்து விளக்கிறது. இஸ்ரேல் நெட் ஜீரோ இலக்கை 2050ம் ஆண்டுக்குள் அடையும் என்று நிர்ணயம் செய்துள்ளது.
சில நிதி ரீதியான உத்தரவாதங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியா இங்கிலாந்து க்ரீன் கேரண்ட்டி இனிசியேட்டிவ் கீழ் இந்தியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உட்பட மூன்று பில்லியன் பவுண்டுகள் நிதியை இங்கிலாந்து வழங்கியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.