scorecardresearch

காசிக்குப் பிறகு மதுரா: இத்கா மசூதி வளாகத்தை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள இத்கா மசூதி வளாகத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காசிக்குப் பிறகு மதுரா: இத்கா மசூதி வளாகத்தை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு
மதுராவில் உள்ள கிருஷ்ணா ஜென்மபூமி வளாகம் மற்றும் ஷாஹி இத்கா மசூதி

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில், கிருஷ்ணர் பிறந்த இடமாக கூறப்படும் இடத்தில் ஷாஹி இத்கா மசூதி உள்ளதாக கூறப்படும் விவகாரத்தில் இத்கா மசூதி வளாகத்தை அதிகாரப்பூர்வமாக வருவாய்த் துறை ஆய்வு செய்து ஜனவரி 20-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்குமாறு மதுரா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூத்த சிவில் நீதிபதி சோனிகா வர்மா, அடுத்த விசாரணை நாளான ஜனவரி 20-ம் தேதிக்குள் வளாகத்தை ஆய்வு செய்து வரைபடத்துடன் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இத்கா மசூதியை நிர்வகிக்கும் இன்டெஜாமியா கமிட்டிக்கு எதிராக பால் கிருஷ்ணா என்பவர் பெயரில் இந்து சேனா நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக
வாரணாசி காசியில் உள்ள ஞானவாபி மசூதியில் கோயில் சிலை இருப்பதாக கூறி தாக்கல் செய்த மனு வாரணாசி நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மதுரா- ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மபூமி-ஷாஹி இத்கா மசூதி பிரச்சனை எழுந்துள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி, வாரணாசியில் உள்ள மாவட்ட நீதிமன்றம் ஞானவாபி மசூதி உள்ள இடத்தை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையர் அஜய் குமார் மிஸ்ராவை நியமித்தது. மேலும் ஆய்வு குறித்து வீடியோ பதிவு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து
வழக்கை மூத்த நீதிபதிக்கு மாற்றியது. தொல்லியல் துறை ஆய்வு செய்ய அனுமதி வழங்கியது.

இந்நிலையில், மே மாதம் மதுராவில் உள்ள ஷாஹி இத்கா மசூதி கட்டப்பட்டுள்ள நிலத்தின் மீது உரிமை கோரி ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மபூமி அறக்கட்டளை மற்றும் பிற தனியார் அமைப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: After kashi it is mathura court orders idgah complex inspection