காசி-தமிழ் சங்கம் 2022 டிசம்பரில் நடந்தது. தொடர்ந்து தற்போது சௌராஷ்டிரா-மதுரை சங்கமம் நடைபெறுகிறது.
இது, சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்தின் ஒரு பகுதியாக, ஏப்ரல் 17 மற்றும் 26 க்கு இடையில், தமிழ்நாட்டிலிருந்து சுமார் 3,000 பேர் கலாசார பயணமாக குஜராத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
அவர்கள் சோம்நாத் கோயில் மற்றும் துவாரகா போன்ற கலாச்சார மற்றும் மத ஸ்தலங்களுக்கும், பிரதமரின் திட்டமான கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலைக்கும் செல்வார்கள்.
முந்தைய சங்கமத்தை முன்மொழிந்த கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள பாரதிய பாஷா சமிதியின் தலைவரான கல்வியாளர் சாமு கிருஷ்ண சாஸ்திரியின் கூற்றுப்படி, சோம்நாத் கோவில் குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதி மக்களை தமிழ்நாட்டுடன் இணைக்கிறது.
மேலும், “கிட்டத்தட்ட 1,000 ஆண்டுகளுக்கு முன்பு, கஜினியின் மஹ்மூத் சோம்நாத் கோயில் பல முறை தாக்கப்பட்டு, கட்டாய மதமாற்றங்கள் நடந்தபோது, அப்பகுதியிலிருந்து பலர் அடுத்தடுத்த மாநிலங்களுக்கு ஓடிவிட்டனர்,” என்று சாஸ்திரி கூறுகிறார்.
மேலும், “அடுத்த 200-300 ஆண்டுகள் இடப்பெயர்வு தொடர்ந்தது. தமிழ்நாட்டுக்கு சென்ற மக்கள் மதுரை அதன் சுற்றுப் பகுதிகளில் குடியேறினார்கள்” என்றார்.
தொடர்ந்து, “தற்போது தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் பரவியுள்ள சௌராஷ்டிரா மக்கள் 12 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் மதுரை, கும்பகோணம், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரந்து விரிந்து காணப்படுகின்றனர்.
அம்மக்கள் தற்போதுவரை தங்களது சொந்த மொழி, மத சடங்குகள் உள்ளிட்டவற்றை தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.
இதை நாங்கள் சிறப்பித்துக் கொள்ள விரும்புகிறோம்” என்கிறார் சாஸ்திரி.
மேலும் கடந்த ஆண்டு காசி சங்கமம் தமிழ்நாடு-வட இந்திய தொடர்பை கொண்டாடியது.
காசி தரிசனம் செய்ய முடியாத சிவன் பக்தர்களுக்கு, தென்மேற்கு தமிழ்நாட்டின் கேரள எல்லைக்கு அருகில் காசி விஸ்வநாதர் கோயிலைக் கட்டிய தமிழ்ப் பகுதியின் பாண்டிய மன்னர்கள் பற்றியும் சிறப்பித்தது.
தமிழ்நாட்டிலிருந்து சுமார் 2,400 பேர் வாரணாசிக்கு குழுக்களாக அழைத்து வரப்பட்டனர், இது எட்டு நாட்கள் நீடித்தது, மேலும் உள்ளூர் அனுபவம், அயோத்தி மற்றும் பிரயாக்ராஜ் பயணங்கள் ஆகியவை அடங்கும்.
முதல் நிகழ்வின் வெற்றியும் எதிரொலியும் பாஜக இரண்டாவது நிகழ்வை கருத்திற்கொள்ள வழிவகுத்தது, இந்த முறை குஜராத் அரசாங்கத்தின் ஆதரவுடன் இந்தப் பயணம் நடைபெறுகிறது.
குஜராத்தைச் சேர்ந்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்நிகழ்ச்சிகளை கண்காணிக்கிறார்.
மேலும், சங்கம பயணத் திட்டத்தை திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா பல்கலைக்கழகமும் திட்டமிட்டுள்ளன.
இதுமட்டுமின்றி சௌராஷ்டிர தமிழ் சங்கமத்தை, “ஏக் பாரத், ஷ்ரேஷ்டா பாரத்” என்கின்றனர். தொடர்ந்து, இணையதள செய்திக் குறிப்பில், “சங்கமத்தின் முடிவில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குஜராத்தைப் பற்றிய அனுபவத்தைப் பெறுவார்கள்.
மேலும் குஜராத் மக்கள் தமிழகத்தின் கலாச்சாரச் செழுமையையும், குறிப்பாக சவுராஷ்டிரத் தமிழர்களைப் பற்றி அறிவைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் ஆரோக்கியமான அனுபவங்களைப் பரிமாறிக் கொள்வார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், குழந்தைகளுக்கான வரலாற்றுப் புத்தகங்களில் என்ன இருந்திருக்க வேண்டும் என்பதை முன்னிலைப்படுத்துவதே இந்த சங்கமங்களின் யோசனை என்கிறார் சாஸ்திரி.
இது தொடர்பாக அவர், “வடக்கு-தெற்கு பிரிவினையைப் பயன்படுத்தி நாட்டை பலவீனப்படுத்தவும், ஒரு மாநிலத்திற்கு எதிராக மற்றொரு மாநிலத்தைத் தூண்டிவிடவும் திட்டமிட்ட முயற்சி நடந்தது” என்றார்.
அடுத்த சங்கமம் இன்னும் திட்டமிடப்படவில்லை அல்லது இறுதி செய்யப்படவில்லை, ஆனால் அடுத்த சில மாதங்களில் இன்னும் அதிகமாக இருக்கும். தமிழ்-அயோத்தி சங்கமம் பரிசீலனையில் இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
ராமர் பிறந்த உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்திக்கு இணையாக தமிழ்நாட்டில் அயோத்தியாப்பட்டணம் என்ற நகரம் உள்ளது.
ராமர் இலங்கையை வென்று இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு, அயோத்திக்குத் திரும்புவதற்கு முன், ராமரும் அவரது குழுவும் இங்குதான் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“