Advertisment

கேதார்நாத் கோவிலில் ரூ.125 கோடி ஊழல்: திட்டமிட்ட சதி என நிர்வாகம் மறுப்பு

கேதார்நாத் கோவில் கருவறையில் தங்க முலாம் பூசப்பட்டத்தில் ரூ.125 கோடி ஊழல் நடைபெற்றதாக கோவில் பூசாரி குற்றஞ்சாட்டியுள்ளார். இதனை நிர்வாகம் மறுத்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
After Kedarnath temple priest alleges Rs 125 crore scam management says charges levelled under well-planned conspiracy

உத்தரகாண்டில் அமைந்துள்ள கேதார்நாத் திருக்கோவில்

கேதார்நாத் கோவிலின் கருவறையின் சுவர்களில் தங்க முலாம் பூசப்பட்டது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. மூத்த அர்ச்சகர் ஒருவர், “தங்கம் பித்தளையாக மாறிவிட்டது” என்று குற்றம் சாட்டி, அதிகாரிகளும் ஸ்ரீ பத்ரிநாத் கேதார்நாத் கோயில் கமிட்டியும் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், கருவறைக்குள் தங்கம் சோதனை செய்யப்படவில்லை என்று சார் தாம் மகாபஞ்சாயத்தின் துணைத் தலைவரும் கேதார்நாத் கோயிலின் மூத்த அர்ச்சகருமான சந்தோஷ் திரிவேதி குற்றம் சாட்டினார்.

Advertisment

இது தொடர்பாக சந்தோஷ் திரிவேதி வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “கடந்த சில தங்களுக்கு முன்பு, (கேதார்நாத்) கோவிலின் கருவறையில் தங்கம் அடுக்கும் பணி முடிந்தது.

ஆனால் இன்று நான் உள்ளே சென்றபோது, தங்கம் பித்தளையாக மாறியுள்ளது.

தங்கம் ஏன் சரிபார்க்கப்படவில்லை? இதற்கு யார் பொறுப்பு? இது தங்கம் என்ற பெயரில் கேதார்நாத்தில் நடந்த ரூ.125 கோடி மோசடி. இது பக்தர்களின் உணர்வுகளுக்கு எதிரான மோசடி” என்று திரிவேதி வீடியோ கூறினார்.

கடந்த ஆண்டு இந்தக் கோவிலில் தங்கம் பதிக்க மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் முன்வந்தார். எனினும் அவர் தனது பெயரை பகிரங்கப்படுத்த விரும்பவில்லை.

இந்த நிலையில் கோவில் பூசாரியின் ஊழல் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக உயர் மட்ட அளவிலான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தி உள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Uttarakhand Temple
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment